பரசுராம பூமி

lord-parasurama-avatar-of-vishnu

திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராமர். இவருக்கு மஹாடாஷ்டிரா மானிலம் ரத்தினபுரி மாவட்டம் சிப்லன் என்ற ஊரிலுள்ள குன்றின் மீது கோவில் உள்ளது. இந்த தலம் பரசுராம் அல்லது பெதி எனப்படுகிறது. குன்றுக் கோயிலில் இருந்து பார்ப்போருக்கு அருகிலுள்ள வசிஷ்தி ஆறு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கொங்கள் இன மக்கள் பரசுராமர் பூமி என இப்பகுதியை அழைக்கின்றனர்.

தல வரலாறுdownload (3)

ஒரு காலத்தில் புல்வெளியாக இருந்த இங்கு பசு ஒன்று தினமும் பால் சுரந்து வந்தது. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பரசுராமர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுயம்பு வடிவில் தான் எழுந்தருளி இருப்பதாக தெரிவித்தார். அதன் பின் வழிபாடு தொடங்கியது. சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு சுயம்பு வடிவில் பரசுராமர் இருந்ததாகக் கூறுகின்றனர். பாறை கற்களால் கோயில அமைந்துள்ளது. பல படிகள் ஏறி குன்றின் மீதுள்ள கோயிலுக்கு செல்லவேண்டும்.

நடுவில் பரசுராமர்Bhagwan_parshuram.

இந்தக்கோவில் 18ம் நூற்றாண்டில் பிரம்மேந்திர சுவாமிகளால் கட்டப்பட்டது. கருவறையில் பிரம்மா விஷ்ணு பரசுராமர் மூவரும் காட்சி தருகின்றனர். இதில் நடு நாயகமாக பரசுராமர் இருக்கிறார். இது ஒரு அரிய தரிசனமாகும். நாலு கைகளுடன் இருக்கும் பரசுராமர் வில் அம்பு கோடாரி வைத்துள்ளார். லாப முத்திரை காட்டுகிறார். காலையும் மாலையும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மன்னர் சாம்ராட் சிவாஜி இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுள்ளார். கோவில் அருகில் வசிஷ்தி ஆறு ஓடுகிறது. படகு சவாரியும் இங்கு உண்டு.

வளையல் காணிக்கை.x220515174905-chiplun2.jpg.pagespeed.ic.OET7jk70g8

வலம்புரி வினாயகர் ஹனுமான் கங்காதேவிக்கு தனித்தனை சன்னதிகள் உள்ளன. பரசுராமரின் தாய் ரேணுகாதேவி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பெண்கள் தங்களின் விருப்பம் விரைவில் நிறைவேற அவளுக்கு வளையல் காணிக்கை செலுத்துகின்றனர். கோவிலுக்குள் பான கங்கா என்னும் குளம் உள்ளது. பரசுராமர் தனது வில்லால் இதை உருவாக்கியதால் பரசுராம் பானகங்கா எனப்படுகிறது. இதன் நீரை தெளித்துக்கொண்டால் பாவம் தீரும் என்பது ஐதீகம். இயற்கை வளம் மிக்க தலம் என்பதால் விடுமுறை நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுகிறது. தங்க ஓட்டல் வசதி உள்ளது. மும்பையிலிருந்து பஸ் வசதி உள்ளது.  மே மாதத்தில் பரசுராம ஜெயந்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 

இருப்பிடம்  மும்பை கோவா தேசீய நெடுஞ்சாலையில் 247 கிமீ தூரத்தில் சிப்லன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s