தியாகபிரம்மம்

download (1)

தீவிர ராம பக்தரான ராம பிரம்மம் சீதம்மா தம்பதிக்கு ஜனவரி 6ம் தேதி 1767 ம் ஆண்டு மூன்றாவது புதல்வராக அவதரித்தவர் சங்கீத மஹான் ஸ்ரீ தியாகராஜர்.

தியாகராஜர் சிறுவயது முதலே பூஜித்து வந்த சீதா ராம லட்சுமண விக்கிரகங்களை அவரது சகோதரர் காவிரி ஆற்றில் எறிந்தார். அவற்றை இழந்து அவர் மிகவும் மனம் வேதனைப்பட்டபோது ஸ்ரீ ராமபிரான் அருளால் அவை மீண்டும் கிடைத்ததாம்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மஹான் ராம கிருஷ்ண யதீந்திரரின் உபதேசப்படி 21 ஆண்டுகளில் 96 கோடி முறை ராம நாமத்தை ஜெபித்து வழிபட்டதால் பகவான் ஸ்ரீராமர் இவருக்கு தரிசனம் தந்தார்.download (2)

ஒரு முறை தியாகராஜர் தீர்த்த யாத்திரை சென்றபோது வழிப்பறிக் கொள்ளையரிடம் சிக்கிக்கொண்டார். அவ்வமயம் ராம லட்சமணர்களே வீரர்கள் போல் வந்து காப்பாற்றினார்களாம்.

தியாகராஜர் நோயுற்றிருந்த போது திருவையாறு தர்ம சம்வர்த்தினி தாயாரே அவருக்கு கஷாயம் தயாரித்து வழங்கி குணப்படுத்தியதாக நம்பப்படுகிறது.download

2400 சுலோகங்களில் வால்மீகி முனிவர் ராமாயணத்தை இயற்றினார். தியாகராஜரும் 2400 கீர்த்தனைகளில் ராமாயணத்தைப் போற்றிப்பாடியுள்ளதால் வால்மீகியின் மறுபிறவி தியாகராஜர் எனக் கூறப்படுகிறது.

1847 ம் ஆண்டில் சமாதியடைந்த அவர் அதற்கு பத்து நாட்களுக்கு முன்பு க்ருப நெல எனும் சஹானா ராக கீர்த்தனையில் தாம் இறைவனடி சேர்வதாக கனவு வந்ததைப் பாடியிருக்கிறார். அவரது பூத உடல் காவிரி நதிக்கரையில் திருவையாற்றில் தகனம் செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் தை மாத பகுள பஞ்சமி தினத்தன்று இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் ப்ஆடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை  தியாக ராஜ ஆராதனை  என்பர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரம்மம் எனப் போற்றப்பட்டுவரும் ஸ்ரீ தியாகராஜரை நாமும் போற்றுவோம்.

 

 

Advertisements

One thought on “தியாகபிரம்மம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s