ஆஹா பாட்டி வைத்தியம்

bo247

தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் புங்கை எண்ணெய் இந்த ஐந்து வகை எண்ணெய்களையும் சமமாக எடுத்து நன்றாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயைப் பக்கவாதம் மூட்டுவலி வந்தவர்கள் நாள்தோறும் தடவி வந்தாஅல் ப்க்கவாதம் மூட்டுவலி குணமாகும்.55350

பொடுதலை என்ற மூலிகையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து இரவில் தலையில் தேய்த்துவிட்டுக் காலையில் தலைக்குக் குளித்து வர பொடுகுத்தொல்லை விரைவில் நீங்கும்  வசம்பைத் தட்டி சிறிது நல்லெண்ணெயில்  நன்றாக கருகுமளவு வறுத்து அதைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக்குளித்துவர பொடுகுதொல்லை நீங்கும்.வாதநாராயணன்-இலை-thamil.co_.uk_

வாதக் கோளாறு உள்ளவர்களுக்கு வாத நாராயணன் இலை நல்ல மருந்து வாத நோய்களை  விரட்டுவதில் வாத நாராயணன் இலை முக்கியப் பங்குவகிக்கிறது. இதன் இலையை நல்லெண்ணெய்யில் வதக்கு உளுந்து பூண்டு இஞ்சி கறிவேப்பிலை மிளகாய் உப்பு புளி சேர்த்து துவையலாக அரைத்து வாரம் ஒரு நாள் உணவோடு சேர்த்து சாப்பிட பேதியாகும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறும். இதனால் வாத நோய் விலகும். கை கால் வலி உடல் வலி சரியாகும். வாதப் பிடிப்பு வாயுப்பிடிப்பு வீக்கம் கட்டி ஏற்பட்டால் வாத நாராயணன் இலையுடன் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் பூசி வந்தால் வலி சரியாகும்..download (3)

எலுமிச்சம் பழச்சாற்றில்  ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும் அதே அளவு மிளகையும் ஊற வைத்து வெயிலில் நன்றாக காயவைத்து  நன்றாகப் பொடித்து எடுத்து பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வென்னீர் குடிக்க பித்தம் குறையும்.b851

சில பூக்களுக்கு மருத்துவகுணம் அதிகம். செம்பருத்திப் பூவை தேனில் ஊறவைத்து தினமும் இருவேளை ஐந்து இதழ்களை உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இரும்புச் சத்து அதிகரிக்கும்.download

தும்பைப்பூவைக் காய்ச்சிய பாலில் இட்டுக் குடித்து வந்தால் தொண்டையில் இருக்கும் கோழைக்கட்டு வெளியேறும்.20-shenbagam-flower4-300

செண்பகப்பூவை நெய்யில் வறுத்து பொடி செய்து இரவில் அரை ஸ்பூன் பாலில் இட்டுக் குடித்து வந்தால் உடல் அயர்ச்சி நீங்கி நன்றாக உறக்கம் வரும்.download (1)

மல்லிகைப்பூவை அரைத்து மார்பில் வைத்துக்கட்டினால் மார்பக வீக்கம் குறையும்  பால் சுரப்பு நிற்கும்.download (2)

வேப்பம்பூவை காயவைத்து பொடி செய்து வென்னிரில் கலந்து தினமும் காலை மாலை குடிக்க வாயுத்தொல்லை குறையும். வேப்பம்பூ ரசமும் வைத்து சாப்பிடலாம்.sugar11

ஒரு சிலருக்கு அடிக்கடி விக்கல் வரும். அது எளிதில் நிற்க சிறிதளவு கற்கண்டுடன் மிளகு சேர்த்து மெல்லும்போது விக்கல் உடனடியாக நின்றுவிடும். இரண்டு சிட்டிகை சுக்குத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டாலும் விக்கல் நின்றுவிடும். இரண்டு சிட்டிகை கடுக்காய் பொடியை நெய்யில் சேர்த்து சாப்பிட்டாலும் விக்கல் எளிதில் நின்றுவிடும்.

Advertisements

2 thoughts on “ஆஹா பாட்டி வைத்தியம்

  1. பாட்டி வைத்தியமோ கை வைத்தியமோ
    பயன்தரும் மருத்துவக் குறிப்புகள்
    சிறந்த உளநல வழிகாட்டல்
    தொடருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s