நியூ[ஸ்]மார்ட்

pali island

பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 7 தலைமுறைகளாக உலகிலேயே காது கேட்காத பேச முடியாத மக்கள் அதிகமாக இருக்கும் இடம் இது. அவர்களிடம் பேசுவதற்காகவே ஒரு தனித்துவம் வாய்ந்த நூற்றாண்டு பழமையான சைகை மொழி சரளமாக எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. தாய்மொழியைப் போலவே ஒவ்வொருவரும் இந்தச் சைகை மொழியையும் இயல்பாகக் குழந்தைபருவத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள். யாருக்கும் தங்கள் குறையை நினைத்து வருத்தமே இல்லை. தேவா கோலோக் என்ற கடவுளின் பரிசுதான் காது கேளாமை என்று நம்புகிறார்கள்.titanic_by_amadscientistடைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக அளிக்கப்பட்ட கடைசி இரவு விருந்தின் மெனு ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு ஏலம் போயுள்ளது. சூப்பர் வகுப்பு பயணிகளுக்கு அளிக்கப்பட்ட மெனுவில் ஆய்ஸ்டர்ஸ் சிப்பி உணவு மாட்டிறைச்சி வாத்துக்குஞ்சு வறுவல் என ஏகப்பட்ட அயிட்டம். அதேபோல் அக்கப்பலில் கிடைத்த ஒரு பிஸ்கட் 15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த பிஸ்கட்டில் டைட்டானிக் கப்பலின் உயிர் காக்கும் படகில் இருந்து கிடைத்த பைலட் பிஸ்கட் ஏப்ரல் 1912 என்று குறிப்பு உள்ளது. ஸ்பில் லர்ஸ் அன்ட் பேக்கர்ஸ் பைலட்’ என்ற நிறுவனத்தின் பெயரும் அதில் காணப்படுகிறது.

download

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அயிசா மிஜினோ ஒரு கட்டடக் கலைஞர். சமீபத்தில் புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார். பேட்டரிகளுக்குப் பதில் உப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்கிறார். சுற்றுச் சூழலுகு பாதுகாப்பானது இது. ஒரு கப் நீரில் இரண்டு டீஸ்பூன் உப்பு சில ரசாயனங்களைச் சேர்க்கும்போது மின்சாரம் உற்பத்தியாகி அதில் கிடைக்கும் வெளிச்சம் எட்டு மணி  நேரத்துக்குத் தாக்குபிடிக்கிறது. மண்ணெண்ணெய் எலக்ட்ரிக் விளக்குகளை விட இது சிக்கனமானது. பிலிப்பைன்ஸின் காளிங்காவில் மின்சாரமே இல்லாத பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடமிருந்துதான் இந்தக் கண்டுப்பிடிப்புக்கான யோசனை இவருக்குக் கிடைத்ததாம். உப்பு விளக்குக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.2010091021532250300

சீனாவின் ஸெஜியாங் பல்கலைக்கழகம் பரிசோதனை முயற்சியாக ஓர் ஆரம்பப் பள்ளி வகுப்பை பெற்றோர்கள் கவனிக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறது. வீட்டில் இருந்தபடியே தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் குழந்தைகளின் வகுப்பறையைப் பெற்றோர் கவனிக்கலாம். 200 பெற்றோர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டது. பெற்றோர் கவனிக்கிறார்கள் எனப்தை மாணவர்களுக்கும் சொல்லிவிட்டனர். நீண்ட நேரம் குழந்தைகள் அமைதியாக இருந்தனர். ஒரு பெண் குழந்தை மட்டும் என் பெற்றோர் கவனிப்பதால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றார். ஆசிரியர்கள்தான் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டனர். மாணவர்களைச் சாதாரணமாகக் கண்டித்தால் கூட பெற்றோர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயந்தனர்.  ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் காலப்போக்கில் நல்ல மாற்றம் வரும் என்று நினைக்கிறது பல்கலைக்கழகம். ஆசிரியர் மாணவர் பெற்றோர் தங்கள் பொறுப்புக்களைச் சரியாகச் செய்வார்கள் என்கிறது.11451382

கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஹர்ஜித் சஜ்ஜன் என்பவர் பதவியேற்றார். கனடாவின் 23 வது  பிரதமராக ஜஸ்டின் டெர்டியூவும் அவருடன் 30 புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் முதலில் தெற்கு வான் கோவரில் இருந்து எம் பி யாக வெற்றி பெற்றவர். போஸ்ன்பியா மற்றும் ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் கனடா ராணுவத்திற்காக பணியாற்றி பல விருதுகளை பெற்றவர். கந்தகாரில் தாலிபாங்களின் செல்வாக்கை குறைக்க பணியாற்றியதற்காக 2013 ஆம் ஆண்டு சேவை விருது பெற்றுள்ளார். சஜ்ஜன் இந்தியாவில் பிறந்து தனது ஐந்து வயதில் குடும்பத்துடன் கனடா சென்றவர்.C2014_Q2_2014_12_16_DP_940x400_v2

லவ்ஜாய் எனப்படும் ஒரு வால் நட்சத்திரம்.  விண்வெளியில் தொடர்ந்து நொடிக்கு 500 பாட்டில் அளவுக்கு ஆல்கஹாலை வெளியிட்டு வருகிறது.  விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஆல்கஹாலை வெளியிடும் வால் நட்சத்திரம் இப்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது. ஆல்கஹால் தவிர சர்க்கரை உட்பட 21 விதமான வேதிப்பொருளையும் இது வெளியிடுகிறது. 1997 ம் ஆண்டுக்குப்பிறகு தொடர்ந்து வானில் காணப்படும் பிரகாசமான வால் நட்சத்திரம் இதுதான். ஜனவரி 30 ம் தேதி இந்த வால் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் வந்தது. அப்போது நொடிக்கு 20 டன் தண்ணீரை வெளியிட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s