ஏழு மலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

 

ஆறு மலைகளைக் கடந்து ஏழாவது மலையான வேங்கடமலையில் வீற்றிருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். அந்த மலைகளை பற்றிய தகவல்download

வேங்கடமலை

வேம் என்றால் பாவம் கட என்றால் நாசமடைதல். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு வேங்கடமலி என்று பெயர் இம்மலையில் வெங்கடாஜலபதியாக [ சீனுவாசன் ] மஹாவிஷ்ணு காட்சி தருகிறார்.

சேஷ மலை

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். சேஷன் என்றால் பாம்பு எனவே இது ஆதிசேஷன் என்ற பெயரால் சேஷமலை என்று அழைக்கப்படுகிறது.

வேத மலை

வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. இது வேதமலை ஆகும்.

கருட மலை

கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து ஒரு மலையை எடுத்து வந்து இங்கு வைத்தார். இதற்கு கருட மலை என்று பெயர்.

download (1)

விருஷப மலை

விருஷபன் என்ற அசுரன் இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். இவனது பெயரில் இங்கு விருஷப மலை உள்ளது.

அஞ்சன மலை

ஆஞ்சனேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க திருப்பதியிலுள்ள ஆதிவராஹரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சனேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஒரு மலை அஞ்சன மலை எனப்படுகிறது.

ஆனந்த மலைTN_20140311152106323481

ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் நடந்த போட்டியில் விஷ்ணு நடுவராக இருந்தார்.  இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட மலைக்கு ஆனந்த மலை என்று பெயர்.

இந்த ஏழுமலைகளிலும் ஏறி வெங்கடாஜலபதியை தரிசித்து வருபவர்களுக்கு மனதில் என்றும் கவலையில்லை. ஏழேழு பிறவிக்கும் பயம் என்பதே இல்லை.

 

Advertisements

One thought on “ஏழு மலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s