வீரபத்திரருக்கு மலைக்கோவில்

temple

32 கைகளுடன் கூடிய வீரபத்திரரை பெங்களூரு தவிப்புரம் குட்டஹள்ளியில் தரிசிக்கலாம். பிரளயகால வீரபத்திரர் என்பது இவர் பெயர். சிறிய மலையில் மீது இந்தக் கோயில் அமைந்துள்ளது.

தலவரலாறுT_500_428

சிவபெருமானை அழைக்காமல் பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்ட பார்வதியையும் தட்சன் அவமதித்தான். கோபமடைந்த சிவன் தனது அம்சமாக 32 கைகளுடன் கூடிய விஸ்வரூப வீரபத்திரை உருவாக்கி யாக குண்டத்தை அழித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் 32 கைகளுடன் பிரளயகால வீரபத்திரர் சிலை வடித்து கோயில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கோயில் அழிந்து விட்டது. இப்பகுதியை ஆண்ட ராயராயசோழன் ஒரு புதரின் மத்தியில் பேரொளி மின்னியதைக் கண்டான். புதரை விலக்கியபோது வீரபத்திரர் சிலையைக் கண்டான். பின் அச்சிலையை பிரதிஷ்டை செய்து மீண்டும் கோயில் எழுப்பினான்.

தேங்காய்த் துருவல் அலங்காரம்G_T8_428

ஒரு சிறிய மலை மீது அமைந்த இக்கோயிலில் உள்ள வீரபத்திரர் மழு நாகம் சூலம் பாணம் சங்கு சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது.  உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும் அவனது மனைவி பிரசுத்தா தேவியும் இருக்கின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நாகதோஷம் உள்ளவர்கள் வீரபத்திரருக்கு துளசி வில்வம் நாகலிங்க பூ மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து போளி நைவேத்தியம் செய்கிறார்கள். கார்த்திகை மாதம் கடைசி செவ்வாயன்று தேங்காய்த் துருவல் சாத்தி அலங்காரம் செய்யப்படும்.  வீரபத்திரர் இத்தலத்தில் உக்கிரமாக இருப்பதால் இவரை சாந்தப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றனர்.

உமா மகேஸ்வரர் சிறப்பு8f6cdd0d-cf23-4796-9412-4aa69d38ff23_S_secvpf

சுவாமி சன்னதி வலப்புறமுள்ள குன்றில் வீர் ஆஞ்சனேயர் புடைப்பு சிற்பமாக காட்சி தருகிறார். வீரபத்திரர் சன்னதிக்கு இடப்புறம் மடியில் பார்வதியுடன் உமா மகேஸ்வரர் காட்சி தருகிறார். நந்தி தேவர் இவரது பாதத்தை பிடித்த படியும் அருகில் வினாயகர் முருகன் வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு.

இருப்பிடம்   பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐந்து கிமீ   ராமகிருஷ்ண ஆஸ்ரமம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அருகிலுள்ள கோயிலுக்கு சென்று விடலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s