நினைவுகளின் சங்கமம்

DSCN0173

போன சனிக்கிழமையன்று என் தோழி பெங்களூரிலிருந்து ஹைதிராபாத் வந்தாள். நீண்ட நாட்களாக செயல்படுத்த முடியாமல் போனதை இம்முறை எப்படியாவது நிறைவேற்றவேண்டும் என தீர்மானமாக இருந்தோம்.  நான் என் தோழி விஜயா  திருமதி ஜெயாராவ்  திருமதி லட்சுமி கணபதி நால்வரும் மெர்ஸி மாடல் பள்ளியில் ஒன்றாக சுமார் 10 வருடங்கள் சேர்ந்து வேலை பார்த்தவர்கள்.  இதில் என் தோழி விஜயா 2003ல் வேலையை விட்டுவிட்டாள். லட்சுமி 2002ல் வேலையை விட்டாள்  [ அவள் கணவர் கணபதிக்கு பரோடாவிற்கு மாற்றலாகி விட்டது ]  ஜெயா ராவ் 2005ல் உடம்புக்கு முடியாத காரணத்தால் வேலையை விட்டுவிட்டாள்.  நான் தொடர்ந்து 2008 வரை வேலை பார்த்தேன். அதன் பிறகு அவரவர்களின் பிள்ளை பெண்கள் திருமணத்தில் சந்தித்துக்கொண்டதுதான்.  நானும் விஜயாவும் தான் அடிக்கடி பார்த்துக்கொள்வோம்  மற்ற இருவருடனும் தொலைப்பேச்சுத்தான்.DSCN0181

2009ல் லட்சுமி பிள்ளை ஆதித்யாவின் திருமணத்தில் ஹைதிராபாத்தில் எல்லோரும் சந்தித்த பிறகு இம்மாதம் 7ம் தேதி அனைவரும் மீண்டும் ஒன்று கூடினோம்.  இம்முறை லட்சுமி வீட்டில் அனைவரும் ஒன்று கூடி  பேசினோம் பேசினோம்  எப்போது சாப்பிட்டோம் என்ன சாப்பிட்டோம் என்பது கூட நினைவு இல்லாமல் காலை 9 மணிக்கு சந்தித்த நாங்கள் மறு நாள் விடியும் வரை பேசி தீர்த்தோம். இதில் லட்சுமி ஹிந்தி டீச்சர்  விஜயா உயிரியல்   நான் கணிதமும் பௌதிகமும்  ஜெயா சமூகவியல் சொல்லிக்கொடுத்தோம்.   எங்களிடம் படித்த மாணவ மாணவியர்களைப் பற்றியும் மிகுந்த ஆசிரியைகள் பற்றியும் யார் யாரிடம் இன்னமும் தொடர்பு உள்ளது என்பது பற்றியும்  இப்போது முக நூலில் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் எங்களின் பிள்ளை பெண்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும் ஓயாமல் பேசித்தீர்த்தோம்.

DSCN0192  மீண்டும் எல்லோருமே எங்களின் கடந்த காலத்திற்கு சென்று  மகிழ்ச்சியான தருணங்களை அசைபோட்டு மகிழ்ந்தோம்.  எத்தனை மகிழ்ச்சியான நாள் அது.   சந்தோஷமான நினைவுகளின் அந்த சங்கமம் எல்லோருக்கும் ஒரு டோஸ் விட்டமின் டானிக் சாப்பிட்ட மாதிரி உற்சாகமாகவும்  தென்பாகவும் இருந்தது என்றால் மிகையில்லை.   நினைவுகளை அசை போட்டதால் எல்லோருக்குமே ஒரு புது தென்பு வந்தது என்பது தான் நிதர்சனம். DSCN0191மீண்டும் இதே போன்ற ஒரு சந்தோஷ தினம் விரைவில் வர வேண்டுமென நினைத்துக்கொண்டே விடைபெற்றோம்.

Advertisements

One thought on “நினைவுகளின் சங்கமம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s