ஆஹா தகவல்

img_6930

இவை புதைகுழிகள் அல்ல.   மண் குளியல் எடுப்பதற்காக செய்யப்பட்ட குழிகள் தான். ஜப்பானிலுள்ள கியூஷூ தீவில் தான் இத்தகைய மண் குளியல் குழிகள் காணப்படுகின்றன. இங்கு வெட்டப்பட்டுள்ள குழிகளில் படுக்க வைத்து தலையை மட்டும் விட்டுவிட்டு உடல் முழுவதும் மண்ணால் மூடி விடுவர். சூரிய ஒளியில் இது போன்று ஒரு நிமிடம் நேரம் இருந்தால் ஆஸ்துமா மலட்டுத்தன்மை மற்றும் நீரிழிவு நோய்கள் பறந்து போவதாக நம்புகின்றனர் இங்குள்ள மக்கள்.download

ஜெர்மனியில் உள்ள  வி8 என்ற ஓட்டல் கார் பிரியர்களின் சொர்க்கபுரியாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள பத்து அறைகளிலும் கார் சம்பந்தப்பட்ட பகுதிகளை கொண்டே வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். இதற்காக காரின் ஒரிஜினல் பாகங்களையே பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு அறையும் இப்படி காரை மையப்படுத்தி வடிவமைத்துள்ளதால் இதில் தங்குவதற்கு கடும் போட்டா போட்டி நிலவுகிறது. வருமானத்தை பெருக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.096951ee3822ea3798d0e71f3fd15bf7இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஜீரோ மியுரா என்பவர் களிமண் மற்றும் பைபர் சேர்ந்த விதவிதமான மோதிரங்கள் செய்வதில் கை தேர்ந்தவர் இவரது கைவண்ணத்தில் உருவான மோதிரத்தை தான் இங்கே படத்தில் பார்க்கிறார்கள். இதுபோன்ற ஏராளமான வடிவங்களில் மோதிரங்கள் செய்து அசத்தி வருகிறார். இந்த வகை மோதிரங்களுக்கு அந்த நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.article-1083788-02631650000005DC-775_468x631

ஆஸ்திரேலியாவில் முதலைப் பண்ணை ஒன்றை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். தண்ணீருக்கடியில் பெரிய பெரிய கண்ணாடி கூண்டுக்குளுக்குள் முதலைகளை அடைத்து வைத்துள்ளனர். நாம் தண்ணீருக்கு அடியில் சென்று கூண்டிலிருக்கும் முதலைகளை பார்த்து ரசிக்கலாம். மனிதர்களைப் பார்த்ததும் நல்ல இரை கிடைத்து விட்டதாக முதலைகள் அதி வேகமாக பாய்ந்து வருவதை ஒரு வித அச்சத்துடன் ரசிக்கின்றனர் மக்கள். இந்த திகில் அனுபவத்தை பெறுவதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.JapanZBusZStop

ஜப்பானில் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள். எந்தெந்த பழ வடிவம் இருக்கிறதோ அந்தந்த பழ வாசனை இதனுள் வெளியாகும் விதத்தில் இவைகளை அமைத்துள்ளனர். நம்மூரில் இப்போது தானே ஏசி பேருந்து  நிறுத்தங்கள் வர ஆரம்பித்துள்ளன. எதிர்காலத்தில் ஜப்பானை போல் இங்கும் வாசனை பேருந்து நிறுத்தங்கள் வராமலா போய்விடும்.download (1)

சிங்கப்பூரில் நிஜ வாத்துக்கு பதிலாக பொம்மை வாத்துக்களே ரேசில் பயன்படுத்தப்படுகின்றன.  ரேஸ் நடக்கும் நாளன்று ஏராளமான வாத்து பொம்மைகளை குவித்து வைத்திருப்பர். ஒரு வாத்து பொம்மையின் விலை 50 ரூபாய்.  விருப்பமுள்ளவர்கள் அப்பொம்மையை வாங்கி அதன் மீது தங்கள் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்ணை எழுதி ஆற்றில் மிதக்க விடுவர். இந்த வாத்து பொம்மைகள் அனைத்தும் சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். நூற்றுக்கணக்கான வாத்து பொம்மைகள் ஆற்றில் விடப்பட்ட பின் ரேஸ் ஆரம்பிக்கும். எந்த வாத்து முதலில் மிதந்து வருகிறதோ அதன் உரிமையாளரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது. இந்த ரேஸ் மூலம் கிடைக்கும் பணத்தை பல நல்ல காரியங்களுக்காக செலவிடுகின்றனர். கடந்த ஆண்டு இந்த வாத்து ரேஸ் மூலம் பத்து லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s