ஆஹா பாட்டி வைத்தியம்

ankle-clipart-as6144

சுளுக்கினால் வீக்கம் வலி இருந்தால் புளியைக் கெட்டியாகக் கரைத்து அதனுடன் கல் உப்பை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கெட்டியானவுடன் பொறுக்கும் சூட்டில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்றுப் போடவும். வீக்கம் குறைந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.etti maram

ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? எட்டிமரக் கொழுந்தை கைப்பிடி அளவு எடுத்து அரை டீஸ்பூன் மிளகு பூண்டு 3 பல் இவற்றை நூறு மில்லி நல்லெண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதைத் தலைக்கு தேய்த்து குளித்துவர ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.01c74197-ff45-45c7-b961-4e1b512abbc5

தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட அம்மை நோய் விட்டுச் சென்ற கொப்புளங்களின் வீரியம் குறையும். இதையே வெளிப்புற மருந்தாகவும் பயன்படுத்தலாம். ஒரு பேயன் வாழைப்பழத்துடன் வேப்பந்தளிர் கொஞ்சம் இள நீர் கஸ்தூரி மஞ்சள்தூள் இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளின் மீது பற்றுப்போட்டு வந்தால் சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும். பேயன் வாழை உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது.download (1)

நீரிழிவு நோய் குணமாக சிறுகுறிஞ்சான் நாவல் கொட்டை நெல்லி வெந்தயம் ஆகிய நான்கையும் சம பங்கு எடுத்து காயவைத்து பொடி செய்து காலை மாலை இரண்டு சிட்டிகை மோர் அல்லது வென்னீரில் சாப்பிட்டு வரவும். இரத்தத்தில் இன்சுலின் படிப்படியாக சுரக்க ஆரம்பித்து நீரிழிவு நோய் குணமாகும்.download

பலருக்கு அரிப்பு தடிப்பு படை என்று சரும பிரச்னைகள் வருவது சகஜம். இதனைப் போக்க கஸ்தூரி மஞ்சள் தூள் வேப்பிலை குப்பைமேனி ஆவாரம்பூ இவற்றை சம அளவு எடுத்து காயவைத்து பொடித்துக்கொள்ளவும். இத்துடன் பயத்த மாவு அல்லது கடலைமாவு கலந்து தினமும் உடலில் தேய்த்து குளிக்க சரும நோய்கள் அண்டாது. தேவையில்லாத ரோமங்கள் உதிர்ந்து சருமம் வழவழப்பாவதுடன் பளீர் என்றும் இருக்கும்.

4 thoughts on “ஆஹா பாட்டி வைத்தியம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s