ஆஹா தகவல்

download

பாங்க் ஆப் கல்கத்தா , பாங்க் ஆப் பம்பாய், பாங்க் ஆப் மெட்ராஸ்  இவை மூன்றும் 1921 ஆம் ஆண்டு ஜனவரி 27 முதல் ஒன்றாய் இணைக்கப்பட்டு இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா என்று புதிய பெயர் பெற்றது..  1955 ல் இந்தப் பெயர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்று மாற்றப்பட்டுவிட்டது. தற்போது இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாய் வளர்ந்திருப்பது இந்த வங்கிதான்.vajreshwari_devi

ஹிமாசலத்தில் உள்ள காங்ரா வஜ்ரேஸ்வரி என்ற தலத்தில் சங்கராந்தியன்று நடக்கும் மருந்து வழிபாடு மிகவும் புதுமையானது. மஹா சங்கராந்தியன்று ஐந்நூறு கிலோ நெய்யை நூறு முறை தண்ணீரில் கழுவுவார்கள். அது வெண்ணெய் போல் ஆகிவிடும். அதனை வஜ்ரேஸ்வரிக்குக் காப்பாக இட்டு அதன் மீது பலவகை பழங்களை வைத்து அலங்கரிப்பர். ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த அலங்காரத்தைக் கலைத்துவிட்டு பழங்களைப் பக்தர்களுக்கு பிரசாதமாக தருவார்கள்.download (2)

விக் எனும் பொய்க்கூந்தல் வழக்கம் நெடுங்காலத்திற்கு முன்பே வழக்கத்திலிருந்து வருகிறது. ஆனால் அது எப்போதிருந்து புகழ்பெற்றது. தெரியுமா? இங்கிலாந்து நாட்டின் முதலாம் எலிசபெத் மஹாராணி  பெரிய அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தனது தலைமுடி அனைத்தையும் இழந்தார். 21 வயதிலேயே வழுக்கைத் தலையான அவர் பொய்க்கூந்தல் அணிவதை வழக்கமாக்கினார். அதன் பிறகே விக் அணிவது நாகரீகமாகிவிட்டது.download (1)South Asian Association for Regional Co ordination [சார்க்] அமைப்பு டிசம்பர் 8 1985 ல் துவங்கப்பட்டது. இவ்வமைப்பில் இந்தியா இலங்கை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் மாலத்தீவு நேபாள் பூட்டான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் பொதுச் செயலாளர் அர்ஜூன் பகதூர் தாபா.SG-thapa இதன் தலைமையகம்  நேபாளத்தில் உள்ளது. ஏழ்மை வறுமை ஊழல் மக்கள் பெருக்கம்  போன்றவைகளுக்கு எதிரான சிந்தனை மற்றும் செயலாக்கத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது சார்க்.download (3)

நாம் காற்றின் வேகத்தைக் கொண்டு தென்றல் சூறாவளி புயல்காற்று என்று பேசுகிறோம். ஆய்வாளர்கள் காற்றின் தன்மையை வகைப்படுத்தியுள்ளார்கள். கோள் காற்று  மூன்று முக்கிய வகைகள் ஆகும். வியாபாரக்காற்று மேல்காற்று கீழ் காற்று என்று கோள் காற்று பிரிக்கப்படுகிறது. கடல் தென்றல் பான் மிஸ்ட்ரல் ஆகியவை தலக்காற்றின் முக்கிய காற்று வகைகள் பருவக்காற்றுகள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட திசை நோக்கி வீசுபவையாகும். உதாரணமாக வடகிழக்கு தென் மேற்கு பருவக்காற்றுகளைக் கூறலாம்.download

சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலையான மூன்றரை அணா தபால் தலை முதன்முதலில் நவம்பர் 21 1947 ல் வெளியிடப்பட்டது. இந்தத் தபால் தலையில் நமது தேசியக்கொடியும் ஜெய்ஹிந்த் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தன.images

ஒரு பௌர்ணமிக்கும் அடுத்த பௌர்ணமிக்கும்  இடைப்பட்ட காலம் என்பது சராசரியாக 29 தினங்கள் 12 மணி 14 நிமிடங்கள். ஆங்கில மாதத்தில் ஒரு மாதம் பௌர்ணமியே வராதிருக்கவும் சாத்தியக்கூறு உள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டுமே அது நேர்ந்து வருகிறது. 28 அல்லது 30 தினங்களே பிப்ரவரி மாதத்திற்கு உண்டென்பதால் நூறு ஆண்டுகளில் நான் கு முறை பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமி தினம் வருவதே இல்லை. கடந்த நூற்றாண்டில் 1915, 1934, 1961, மற்றும் 1999 வருடங்களில் பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமி வரவேயில்லை. வரும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் பௌர்ணமி தினம் கிடையாது.

 

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s