அரச மரத்தைச் சுற்றுவோம்

LRG_20150409173011430649

வழிபாட்டில்  ஒரு அங்கமாகவே திகழ்கிறது அரச மரத்தை வலம் வருவது. குறிப்பாக திங்கட்கிழமையன்று அமாவாசை வந்தால் அதிகாலையில் அரச மரத்தை சுற்றி வழிபடுவது பல நன்மைகளைத் தரும். இதை அமா சோமவார பிரதட்சணம் என்பார்கள். 108 முறை வலம் வருதல் மிகவும் சிறப்பு. இதனால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன் என்பது கீதையில் கண்ணன் வாக்கு. அரச சமித்துகளை மந்திர பூர்வமாக அக்னியிலிட்டு ஹோமம் வளர்க்க கபம் பித்தம் போன்ற நோய்களை நீக்கும். அரச மரத்தை தொடக்கூடாது. ஆனால் சனிக்கிழமை மட்டும் தொட்டு வழிபடலாம்.

அரச மரம் சர்வ தேவதா ரூபம். வடமொழியில் அதன் பெயர் அஸ்வத்த விருட்சம் அரச மரத்தில் நிழல் போதம் என்ற தத்துவ ஞானத்தைத் தரும். சித்தார்த்தா அரச மரத்தடியில் தவம் செய்து புத்தர் ஆனார். அதனால் இம்மரம் போதிமரம் எனப்பெயர் பெற்றது. அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறு நாளுக்குள் அழிந்துவிடும்.

அரச மரத்தை திங்களன்று வலம் வந்தால் மங்கலம் உண்டாகும். செவ்வாய் தோஷங்கள் விலகும். புதன் வியாபாரம் பெருகும். வியாழன் கல்வி வளரும். வெள்ளியன்று வலம் வர சகல சௌபாக்கியங்களும் கிட்டும். சனியன்று வலம் வர சர்வ கஷ்டங்களும் விலகி  லட்சுமியின் அருள் கிடைக்கும். ஞாயிறு வலம் வர நோய்கள் நீங்கும்.

தென் காசியை அடுத்த ஆயக்குடி பாலசுப்ரமணியர் கோயிலில் அரச இலைகளின் மீது விபூதி வைத்து பிரசாதமாகத் தரப்படுகிறது. திருவாவடுதுறை திரு நல்லம் திருப்பரிதி நியமம் ஆகிய சிவத் தலங்களிலும் திருக்கச்சி துருப்புட்குழி திருப்புல்லாணி போன்ற வைணவத் தலங்களிலும் அரச மரமே தல விருட்சமாக விளங்குகிறது.

அறிவியல் விளக்கம்neem tree and ravi tree

அரசும் வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர் உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இவற்றை வலம் வரும்போது உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு சுரப்பு நீர் சமப்படுத்தப்படுகிறது. அரச இலை அசையும்போது அதன் சத்து காற்றில் பரவுகிறது. விஞ்ஞான ஆய்வுப்படி ஓர் அரசமரம் நாள் ஒன்றுக்கு 1800 கிலோ கரிமிலவாயுவை உட்கொண்டு 2400 கிலோ பிராணவாயுவை வெளியிடுகிறது. அரச மரத்தை அதிகாலையில் வலம் வந்தால் அது வெளிவிடும் பிராண வாயுவில் ஓசோனின் தாக்கம் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு சுக்கிலவிருத்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைபேறு உண்டாகும்.

மரமே அரச மரமே நீ தேவ விருட்சம் தேச கடாட்க்ஷம்  நீயே ஆதிபிராணான் சூரியனை முதலில் உணரும் நீயின்றி இந்த பூமியில் எங்களுக்கு வாழ்வேது? இந்த பூமிக்கு அழகையும் எங்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும் உன்னை பணிந்து வலம் வந்து வணங்கி வளம் பெறுவோம்.

Advertisements

One thought on “அரச மரத்தைச் சுற்றுவோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s