ஆஹா தகவல்

1000-rs-note

இந்திய ரூபாயில் 20 ரூபாய் நோட்டில் செவ்வக வடிவமும் 50 ரூபாய் நோட்டில் சதுரமும் 100 ரூபாய் நோட்டில் முக்கோண வடிவமும் 500 ரூபாய் நோட்டில் வட்ட வடிவமும் 1000 ரூபாய் நோட்டில் டயமண்ட் வடிவமும் இருக்கும். ஒவ்வொரு நோட்டின் இடதுபுறமும் இண்டாலியோ என்ற அச்சிடும் முறையில் செதுக்கப்பட்டிருக்கும்.  இது கண் பார்வை இல்லாதவர்கள் ரூபாய் நோட்டின் இடதுபுறத்தை கைகளால் தடவி அதன் மதிப்பைக் கண்டு பிடிக்க உதவும்.  எந்தவித வடிவமும் அச்சிடப்படாமல் இருந்தால் அது 10 ரூபாய் நோட்டு என்று அறிந்து கொள்வார்கள்.abedananda

திருவனந்தபுரத்திற்கு  அருகிலுள்ள அபேதா ஆசிரமம் நிறுவிய சுவாமி அபேதானந்தா குருமகராஜ் பிறந்த ஊரான ஆரையூரில் உள்ள அபேதா ஆசிரமத்தில் ஒரு விசித்திரத்தைப் பார்க்கலாம். இரவு பகல் இடைவெளியில்லாமல் ஒருவர் மாற்றி ஒருவர் தம்புராவை மீட்டியபை ஒரு கூண்டுக்குள் இருக்கும் தீபத்தைச் சுற்றி வலம் வந்துகொண்டே இருப்பார்கள். களைத்தவர்கள் அமர்ந்தால் அடுத்தவர் அதைத் தொடர்வார். இவ்வாறு 70 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த அதிசயத்தை இன்றும் சென்றால் இதனைத் தரிசிக்கலாம்.

Hotel Adlon Berlin
Hotel Adlon Berlin

ஜெர்மனி நாட்டில் உணவகத்திற்கு சென்று ஒரு உணவை மெனு கார்டில் இருந்து சப்ளையரிடம் சொல்லிவிட்டு உண்ணும்போதே அடுத்த உணவுக்கு ஆர்டர் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பணம் நீங்கள் நிறைய வைத்திருக்கலாம். ஆனால் உணவு வீணாவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எனவே ஒரு ஐட்டம் உணவை உண்டு முடித்து விட்டுத்தான் அடுத்தது ஆர்டர் செய்ய வேண்டும் என பதில் கூறுவார்கள். உணவை வீணாக்க அனுமதிக்க மாட்டார்கள்.download (1)

வீட்டில் சூரியகாந்தி செடிகளை வளர்த்தால் யாருக்கும் ஜலதோகஷம் வராது. துளசிச் செடி வளர்த்து வந்தால் கொசுக்கள் படை எடுத்து வராது. எல்லாக் கொசுக்களும் மனிதனைக் கடிக்காது. பெண் கொசுக்களுக்கு முட்டையிடுவதற்கு புரோட்டின் சத்து  தேவைப்படுகிறது. இந்தச் சத்தை மனிதனின் ரத்தத்திலிருந்து எடுப்பதற்காகவே அது மனிதனைக் கடிக்கிறது என்பது விந்தையான உண்மை.sri krishns guruvayur temple thrichur

பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜைக்கு 1000 லிட்டர் பாலில் பாயசம் செய்து நைவேத்தியமாகப் படைக்கப்படகிறது. அணைந்த விறகை அடுத்த நாள் உபயோகத்திற்கு எடுக்கக்கூடாது என்பதால் தேங்காய் மட்டைகளை அடுப்பு எரிக்கப்பயன்படுத்துகிறார்கள். மிகவும் ருசியாக இருக்கும் இந்தப் பாயசத்தில் குங்குமப்பூ ஏலக்காய் போன்ற கூடுதல் சுவை சேர்க்கும் பொருள்கள் எதுவும் சேர்க்கப்படுவதில்லை என்பது மற்றுமொரு சிறப்பு.nails

ஆணி என்றாலே துருப்பிடிக்கும். கப்பல்களில் அடிப்பாகத்தை இணைப்பதற்கு இரும்பு ஆணி அடித்தால் அது கடல் நீரில் பட்டு எளிதில் துருப்பிடிக்கும். அதனால் எருமை மாட்டுக் கொம்புகளின் உறுதியாக  நுனிப்பகுதியில் இருந்து ஆணிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆணிகள் கப்பல் செய்யப் பயன்படுகின்றனdownload

ஃபலக்னாமா அரண்மனை 19 ம் நூற்றாண்டில் ஐதிராபாத்தின் பிரதம அமைச்சராக  இருந்த நவாப்விகார் உல் உம்ராவால் கட்டப்பட்டது. சுமார் 32 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனை ஒரு தேளின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு கொடுக்குகள் போல வடக்குப்புறம் நீண்டுள்ளது. வால் பகுதில் சமையல் அறை உள்ளது. அந்த அரண்மனையில் மிகச் சிறப்பாக உள் அலங்காரம் செய்யப்பட்ட 220 அறைகள் மேற்கூரைகள் வண்ணக் கண்ணாடிகள் பொருந்திய ஜன்னல்கள் பளிங்கு படிக்கட்டுக்கள் ஒரே நேரத்தில் 100 பேர் சாப்பிடக்கூடிய சாப்பாட்டு மேஜை தங்க பாத்திரங்கள் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்கின்றன.

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s