ஆஹா டிப்ஸ்

download (1)

துணிகளுக்கு கஞ்சி போடும்போது அந்த கஞ்சியில் இரண்டு டீஸ்பூன் கிளேஸியல் அசிடிக் ஆசிட்டை சிறிது கலந்து போட்டால் துணிகள் ஃட் ஆக இருக்கும்  மடிப்புகளில் துணி ஒட்டிக்கொள்ளாது. இஸ்திரி செய்த துணிகளில் லேசான பளபளப்பும் இருக்கும்.670px-Keep-a-Gas-Stove-Clean-Step-4-Version-2

தீபாவளி பட்சணம் செய்த பிறகு அடுப்பெல்லாம் எண்ணெய் பிசுக்காக இருந்தால் முதலில் ஒரு பேப்பரை வைத்து அடுப்பை ஒரு முறை துடைத்து எடுக்கவும். பிறகு சிறிது பேக்கிங் சோடாவில் தண்ணீர்விட்டுக் குழைத்து அடுப்பின் மீது தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின்பு ஈரத்துணியால் நன்கு அழுத்தித் துடைக்கவும். இப்போது ஸ்டவ் சமைத்த சுவடே தெரியாமல் பளிச் என்று இருக்கும். சில துளிகள் வினிகரும் சேர்த்துக்கொண்டால் இன்னும் பளிச்சிடும்.023857738117lg

வீட்டில் ஜன்னல் கதவு சுவர் இடுக்குகளில் கரையான் அரித்தால் அதனை ஒழிக்க ஊசி போடும் சிரிஞ்சில் மண்ணெண்ணெயை எடுத்து மண்ணை சுரண்டி எடுத்துவிட்டு  அதில் மண்ணெண்ணெயை ஸ்பிரே செய்ய வேண்டும். கரையான் முற்றிலும் அழிந்துவிடும்.530312799_XS

வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் காலங்களில் சேகரித்து சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு நன்றாகக் கழுவி சிறிது உப்பிட்ட மோரில் இரவு ஊற வைக்கவும். இப்படி நாலு நாட்களுக்கு செய்து நன்றாக காய வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும். தேவைப்படும்போது எண்ணெயில் சுண்டைக்காய் பொரிப்பது போல பொரித்தெடுத்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார் மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் சுவையாக இருக்கும் பித்தம் வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.ven-pongal-in-tamil

வெண்பொங்கல் கெட்டியாகாமல் ஹோட்டலில் கல்யாண வீடுகளில் இருப்பது போல தள தளவென்று கடைசிவரை இருக்கவேண்டுமானால் நெய்யுடன் பாதியளவு  ரீஃபன்ட் ஆயிலைக் கலந்து காய்ச்சி பொங்கலில் விடவும் பொங்கல் ஆறினாலும் தள தளவென்றிருக்கும்  சுவையும் குறையாது.downloadபப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப் பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப்பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். பப்பாளிப் பழத்தைக் கூழாகப் பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கி முகம் அழகு பெறும்.  

Advertisements

2 thoughts on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s