திருப்பாய்த்துறை நாதர்

100_0022புராண காலத்தில் இத்தலம் தாருகாவனம் எனப்பட்டது. இங்கு வசித்த ரிஷிகள் தாங்களே அனைத்துக் கலையிலும் உயர்ந்தவர்கள் என்றும் தங்கள் மனைவியர் மட்டுமே கற்புக்கரசிகள் என்றும் ஆணவத்துடன் செயல்பட்டனர். சிவன் விஷ்ணு இருவரும் இவர்களுக்கு பாடம் புகட்ட விரும்பினர். சிவன் காண்போரைக் கவரும் அழகுடன் பிட்சாடனர் என்ற பெயர் தாங்கி கையில் திருவோடு ஏந்தி வந்தார்.100_0043

விஷ்ணு அழகே உருவான மோகினி என்னும் பெண்ணாக வந்தார். ரிஷிகள் மோகினியின் அழகில் மயங்கி விஷ்ணுவைப் பின் தொடர்ந்தனர்.   ரிஷிபத்தினிகளோ தங்களின் கற்பையும் மறந்து சிவனின் அழகில் மயங்கி பின் தொடர்ந்தனர். சுதாரித்துக் கொண்ட ரிஷிகள் வந்திருப்பது ஏதோ மாயக்காரர்கள் என எண்ணி அவர்களை விரட்ட முயன்றனர். அதற்கு அவர்கள் மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். ஆனால் அவர்கள் ஏவிய ஆயுதங்களைச் சிவன் தனதாக்கிக்கொண்டார். பின்பு ரிஷிகளின் முன் பேரழகனாக காட்சி தந்த சிவன் பக்திக்கு ஆணவம் கூடாது என்று உணர்த்தினார். தங்கள் ஆணவத்தை அடக்கிய ரிஷிகள் அங்கேயே தங்க வேண்டும் என வேண்டினர். அதன்படி இத்தலத்தில் தாருகாவனேஸ்வரர் என்ற  பெயரில் லிங்க வடிவில் எழுந்தருளினார்.

பராய்த்துறை நாதர்ko184

பிற்காலத்தில் இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக மாறியது. சுயம்புலிங்கம் இருந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது. அதனால் சுவாமிக்கு பராய்த்துறை நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை வழிபட்டால் கல்வி வளம் பெருகும். மூலவர் மீது புரட்டாசி 18ம் நாளில் சூரிய ஒளி படர்வது குறிப்பிடத்தக்கது. அம்மன் பசும்பொன் மயிலம்மையும் நடராஜரும் தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்த நாரீஸ்வரர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் காட்சி தருகின்றனர். வைகாசி பிரம்மோற்சவத்தில் நடராஜரின் தேர் பவனி நடக்கும். சம்பந்தர் திரு நாவுக்கரசர் ஆகியோர் இங்கு பதிகம் பாடியுள்ளனர்.

காலணியுடன் கந்தன்large_123734905பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் இருக்கிறார். இவர் மீது அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ளார். மற்றொரு சன்னதியில் உள்ள தண்டாயுதபாணி காலில் செருப்பு அணிந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள வராகியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றினால் திருமணத்தடை நீங்கும். இத்தல வினாயகரின் திரு நாமம் செல்வ வினாயகர். பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார். முன் மண்டபத்தில் பன்னிரு ராசிகள் குறித்த கட்டம் விதானத்தில் இருக்கிறது. இதன் கீழ் நின்று சிவலிங்கத்தையும் பிட்சாடனரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் கிரஹதோஷம்  நீங்கும். ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள வினாயகர் பரளி வினாயகர் என அழைக்கப்படுகிறார்.

`முதல் முழுக்குthiruparai

கோவில் அருகே ஓடும் காவிரியே தீர்த்தமாக இருக்கிறது. இதனை அகண்ட காவிரி என்கின்றனர்  இங்கிருந்து இரண்டு கிமீ தூரத்தில் காவிரி கொள்ளிடம் என இரு நதிகளாக பிரிகிறது. மயிலாடுதுறையில் ஐப்பசியில் கடைசி நாளில் கடை முழுக்கு  நடப்பது போல இங்கு ஐப்பசி முதல் நாளில் முதல் முழுக்கு எனும் துலா ஸ்நானம் நடக்கும். இந்நாளில் சுவாமி ரிஷப வாகனத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார். இந்த நாளில் காவிரியில் நீராடினால் பாவம் நீங்கும்.

இருப்பிடம்   திருச்சி கரூர் ரோட்டில் 15 கி மீ

 

Advertisements

One thought on “திருப்பாய்த்துறை நாதர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s