அருவி போதிக்கும் விஷயம்

images

கரைகளை மோதி சலசலத்து அருவியாகிக் குதித்து ஒலியெழுப்பிப் பரவியது அந்த ஓடை, குளிர்ந்தும் தூய்மையாகவும் தென்பட்ட அந்த நீரில் இலைகளும் குச்சிகளும் மிதந்து வந்தன. ஓடையில் சில இடங்களில் நீரின் சுழிக்கண்களில் சிக்கிச் சுழன்றன சில இலைகளும் குச்சிகளும். சில கரையோரமாய் ஒதுங்கின. சில  நீர்ப்போக்கில் இழுத்து செல்லப்பட்டன. சில நீரில் மூழ்கின. மான்கள் ஒரு புறம் நின்று நீர் பருகிக்கொண்டிருந்தன. மீன்கள்  சில துள்ளிக் குதித்தன. அவற்றை உணவாக்கிக்கொள்ளூம் முனைப்புடன் நின்று கொண்டிருந்தன நாரைகள். நீரின் ஒலியைத் தவிர வேறு சப்தமே இல்லாத அபூர்வ அமைதி

இந்த ஓடைக்கரையில் வந்த நின்ற குரு சீடர்களைப் பார்த்து கேட்டார்  “ என்ன உணர்கிறீர்கள்?’  “ சுழல்கள் இல்லாமல் நீரின் பயணம் இல்லை. சிக்கல்கள் இல்லாமல் மனித வாழ்வும் இல்லை.” என்றான் ஒருவன். ‘ சுழல்களில் சிக்கினால்  நீரில் மூழ்க வேண்டி வரும். உணர்ச்சிகளில் சிக்கினால் லௌகீகத்திலேயே அமிழ்ந்து போவோம் “ என்றான் இன்னொருவன். “ சந்தோஷத்தின் அருகிலேயே ஆபத்தும் இருக்கிறது என்று புரிந்து கொள்வது நல்லது. மீன்களைப் பிடிக்கும் நாரைகளும் நீரிலேயேதான் நிற்கின்றன என்றான் மற்றொருவன்.

“ விழுந்தும் குதித்தும் பறவைகளின் கால்களில் மிதிபட்டும் குலைகிறது தண்ணீர் அப்படித்தான் மனிதனும் ஆசைகளால் அவதிப்படுகிறான் “ என்றான் அடுத்தவன். எல்லாவற்றையும் கேட்ட குரு சொன்னார்.

“ நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆனால் அருவி விழுந்ததா எழுந்ததா என்பது முக்கியமல்ல. நீர் தன் பயணத்தை நிறுத்தவில்லை. மீன்கள் துள்ளுவதோ நாரைகள் நிற்பதோ மான்கள் நீர் அருந்துவதோ நீரின் பயணத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. இலைகளோ குப்பைகளோ விழுந்தால் கூட அவற்றை கரையோரமாய் ஒதுக்கி சென்றுகொண்டேயிருக்கிறது நீர் தான் தேங்குவதில்லை. இதுதான் கவனிக்க வேண்டியது  எதை  அடைய வேண்டும் என்று  நினைக்கிறோமோ அதை நோக்கி தீவிரமாக இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இடைவிடாத ஊக்கம் மிகுந்த அந்தச் செயல்பாடுதான் லௌகீகம். ஞானம் இரண்டிலுமே அவசியமானது. இதுதான் இந்த அருவி போதிக்கும் விஷயம்”/

Advertisements

One thought on “அருவி போதிக்கும் விஷயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s