பெயர்க் காரணம்

images

கோகா கோலா

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் ரசித்து அருந்தப்படும் கோகா கோலா பானம் முதலில் தலைவலி மருந்தாகத்தான் பயன்படுத்தப்பட்டது. கோகா இலைகள் மற்றும் கோலா பருப்புக்களை இணைத்து தயார் செய்யப்பட்ட கஷாயத்தைத் தண்ணீரில் கலக்கிக் குடித்தால் தலைவலி பறந்து போகும் என்று விளம்பரப்படுத்தி அமெரிக்காவில் விற்பனை செய்திருக்கிறார்கள். ஒரு நாள் எதேச்சையாக சோடா நீரில் இந்தக் கஷாயத்தைக் கலந்து குடித்தபோது அருமையான பானம் கிடைத்திருக்கிறது. அதுதான் இன்றைய கோகா கோலா   இப்போதெல்லாம் நிறையப்பேர் கோகா கோலாவைக் குடிக்கவில்லையென்றால் தலைவலி வந்தது போல புலம்புகிறார்கள்.

கார்ன் ஃப்ளேக்ஸ்obrazek

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கார்ன் ஃப்ளேக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதும் தற்செயலாகத்தான். கேத் கெல்லாக் என்ற அமெரிக்க மருத்துவர் அவரது மருத்துவமனை நோயாளிகளுக்கான பத்திய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தார். ரொட்டி தயாரிக்கும்போது கோதுமை மாவை அடுமனையில் பல மணி நேரம் மறந்து வைத்துவிட்டார். எடுத்துப்பார்த்தபோது அது சின்னசின்னதாக ஆனால் சிப்ஸ் போலப் பிரிந்து மொறு மொறுவென்று இருந்தது. நோயாளிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சோளமாவில் அதைச் செய்து பார்த்தார். அதுதான் இன்றளவிலும் உலகம் முழுவதிலும் சூப்பர் ஹிட்டாக விளங்கும் கார்ன் ஃப்ளேக்ஸ்.

எக்ஸ்ரேdownload (2)

ஜெர்மன் விஞ்ஞானி  வில்ஹம் ரான்ட்ஜென் 1895 ஆண்டு மார்ச் 27ம் தேதி  தனது ஆய்வுக் கூடத்தில் கேத்தோட் கதிர்வீச்சை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். பணியை முடித்துவிட்டு கிளம்பியபோது அந்த அறையின் மின்விளக்கை அணைத்தார். ஆனால் கேத்தோட் ரே இருந்த குழாயில் இருந்து வெளிச்சம் பளீரிட்டது. வெவ்வேறு பொருட்களைக்கொண்டு அதனை மறைக்கப்பார்த்தும் ஒளியை மறைக்க முடியவில்லை. அப்போது அவரது கையை அந்த ஒளி ஊடுருவியது. அப்போது கையிலுள்ள எலும்புகள் தெளிவாகத் தெரிந்தன. அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் எக்ஸ்ரே. அது நோபல் பரிசையும்  அவருக்குப் பெற்றுக்கொடுத்தது.

மைக்ரோவேவ் ஒவன்download (1)

பெர்ரி ஸ்பென்ஸர் என்ற அமெரிக்க கப்பற்படை அதிகாரி இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஒரு நாள் தனது பாக்கெட்டில் சாக்லெட்டை வைத்துக்கொண்டு ஒரு ரேடார் ஆய்வுக்கூடத்தினுள் நடந்து சென்று கொண்டிருந்தார் அங்கே இருந்த மேக்னெட்ரான் என்ற ரேடார் ஆய்வு சம்பந்தப்பட்ட கருவியினைக் கடந்தபோது அவரது பாக்கெட்டினுள் வைத்திருந்த சாக்லெட் உருகி ஊற்றியது. குழம்பிப்போன ஸ்பென்ஸர் அது குறித்து ஆராய்ந்தார். அப்போது உருவானதுதான் இன்று உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் மைக்ரோவேவ் ஒவன்.

டைனமைட்download

நைட்ரோ கிளசரின் என்ற திரவத்திலிருந்து வெடி பொருட்கள் தயார் செய்து வந்தார்கள். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் என்ற விஞ்ஞானி   நைட்ரோ கிளசரின் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார். ஒரு நாள் அவரது சகோதரரும் அவரது உதவியாளர்களும் வெடி விபத்து ஒன்றில் உயிரிழந்தார்கள். வெடி பொருட்களை பத்திரமாகக் கையாளப் பல ஆராய்ச்சிகளை செய்தார் நோபல். அப்போது ஒரு நாள்  நைட் ரோ கிளசரின் வைக்கப்பட்டிருந்த பெட்டி உடைந்து அதிலிருந்து அந்த திரவம் வழிய ஆரம்பித்தது. ஆனால் உடனடியாக அது உறிஞ்சப்பட்டு பெரும் விபத்து தடுக்கப்பட்டது. அந்த பெட்டி kieselguhr  என்ற வேதியல் பொருளால் பூச்சு செய்யப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு டைனமைட் தயார் செய்தார் நோபல். பிற்காலத்தில் தன் கண்டுபிடிப்பான டைனமைட் அழிவுக்குப் பயன்படுவதைப் பார்த்து  நொந்து போனார். தனக்குக் கிடைத்த வருமானத்தை வைத்து ஆக்கப்பூர்வமாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசளிக்க வழிவகை செய்தார் அவர். அது தான் உலகப்பிரசித்தி பெற்ற நோபல் பரிசு.

Advertisements

One thought on “பெயர்க் காரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s