ஆஹா பாட்டி வைத்தியம்

download

குழந்தைகள் விளையாடும்போது கீழே விழுந்தாலோ இடித்துக்கொண்டாலோ தலை நெற்றி போன்ற இடங்களில் அடிபட்டு வீங்கிவிடும் ஒரு சிறிய வெள்ளைத்துணியில் சிறிது கல் உப்பை மூட்டையாகக் கட்டி சூடான நல்லெண்ணெயில் முக்கி பொறுக்கும் சூட்டில் வீக்கத்தில் ஒத்தடம் கொடுத்தால் சரியாகிவிடும்.624

எலும்பு முறிவு குணமாக பிரண்டையை அரைத்து அடிப்பட்ட இடத்தின் மீது கட்டியும் பிரண்டையை துவையலாக அரைத்து சாப்பிட்டும் வர வலி வீக்கம் குறைந்து உடைந்த எலும்புகள் விரைவில் இணைவதோடு எலும்புகள் பலம் பெறும். பிரண்டைத்துவையல் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தஓட்டம் சீராவதுடன் இதயம் பலம் பெறும்.keelanelli

கீழா நெல்லி வேர் ஒரு கப் செம்பருத்தி பூ இடித்த தூள் அரை கப் வேம்பாள பட்டை இரண்டு பட்டை கறிவேப்பிலை ஆறு கப் இவை அனைத்தையும் வெயிலில் ஒரு மணி நேரம் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நிற்கும். மேலும் கூந்தல் கருமையாக செழித்து வளரும். தொடர்ந்து இந்த எண்ணெயைத் தடவி வர வழுக்கையும் மறையும்.large_1343517898

ஏலக்காய் செரிமான சக்தியைக் கூட்டி பசியை அதிகரிக்கும். நாலைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு திறக்கும். சில ஏலக்காய்களை நசுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு அரை கப் கஷாயமாக காய்ச்சி அதில் சிறிதளவு பனைவெல்லம் கலந்து சாப்பிட்டால் மயக்கம் தலைசுற்றல் உடனே நீங்கும்.drumstick-leaves2

ஐம்பது வயது தாண்டியதுமே சில பெண்மணிகளுக்கு சரியாக நீர் பிரியாமல் சிறிது நேரம் காலைத் தொங்கப்போட்டாலே கால்களில் வீக்கம் வலி ஏற்பட்டு அவதி படுகிறார்கள். இப்படி வலி இருக்கும்போது முருங்கைக் கொழுந்து இலையுடன் கூடிய காம்பை அரிசி கழுவிய தண்ணீருடன் கொதிக்கவைத்து இரண்டு கப்  அளவு எடுத்து உப்பு சேர்த்து பருக சிறு நீர் நன்றாக பிரியும். வீக்கமும் வலியும் குறையும்.sl377 (1)

வயிற்றுப்போக்கு வந்து தண்ணீராய் பேதியாகும் போது மருந்து மாத்திரை மருந்துகள் தேவையில்லை. எளிய வைத்தியம் ஒரு கப் மோரி ஒரு சிட்டிகை சுக்குப்பொடி அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் கலந்து குடிக்க பேதி உடனே நிற்கும். தண்ணீரில் சிறிது சர்க்கரையும் உப்பும் கலந்து அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்க உடலில் நீர் வற்றிப்போகாது.

Advertisements

One thought on “ஆஹா பாட்டி வைத்தியம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s