மஹாராஷ்டிராவில் தீபாவளி

event-img4

நாம் ஒரு நாள் மட்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடுவோம். மஹாராஷ்டிரா மானிலத்தில் ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள். சாதாரணமாகவே எந்த பண்டிகையானாலும் வெகு உற்சாகத்துடனும் அமர்க்களமாகவும் கொண்டாடும் மராட்டியர்கள் தீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டை ஒட்டடை அடித்து பெயின்ட் பண்ணி பாத்திரங்களை பள பள வென்று தேய்த்து வைப்பார்கள். தினமும் விதவிதமான ரங்கோலி வீட்டு வாசலை அலங்கரிக்கும். வாசலில் தோரணம் கட்டி அகல் விளக்கு ஏற்றி முதல் நாளை ரமா ஏகாதசி என்று அழைப்பார்கள்.

இரண்டாவது நாள் வாசுபாரஸ் என்று அழைப்பார்கள் அன்று பசுவையும் அதன் கன்றையும் பூஜிப்பார்கள்.marathidiwali1மூன்றாவது நாள் தன திரயோதசி  அன்று ஏதாவது புது பாத்திரம் வாங்கி செல்வத்தை பூஜிப்பார்கள். அன்று வெல்லமும் தனியாவும் பிரசாதமாக வழங்குவார்கள்.

நான்காவது நாள் நரக சதுர்த்தசி  அன்று விடியற்காலை ஸ்நானம் விசேஷம்.

ஐந்தாம் நாள் லக்ஷ்மி பூஜை  அன்று லக்ஷ்மியை பூஜிப்பார்கள்.

ஆறாம் நாள் பாட்வா அன்று பெண்கள் தம் கணவரை ஒரு பலகையில் உட்காரவைத்து மனைவி ஆரத்தி எடுப்பர். ஆரத்தி தட்டில் கணவர் பணமோ நகையோ மனைவிக்கு பிடித்த ஏதாவது ஒரு பொருளை போடுவார். வியாபாரிகளின் புது வருஷ  ஆரம்ப தினம் அது. DIWALICHA PADVA

ஏழாம் நாள் பாவு பீஜ். உடன் பிறந்த சகோதரனை அழைத்து விருந்து வைப்பார்கள். சகோதரனை பலகையில் உட்காரவைத்து சகோதரி ஆரத்தி எடுப்பர். சகோதரன் தன் சக்திக்கு ஏற்ப பணம் புடவை நகை என்று சகோதரிக்கு கொடுத்து அவளை சந்தோஷப்படுத்துவார்.diwali-faral-250x250

இப்படி ஏழு நாட்கள் தீபாவளி பண்டிகை அமர்க்களமாக வாண வேடிக்கை பட்டாசு என்று கோலகலமாக நடக்கும். தினமும் பாஸந்தி  ஸ்ரீகண்ட் குலாப்ஜாமூன் ஜிலேபி என்று ஏதாவது ஒரு ஐட்டம் இருக்கும். பட்சண வகைகளில் பூந்தி லட்டு அதிரசம் சங்கர் பாளி கர்ச்சிக்காய் சில்டா சக்லி என்று பல வகை இருக்கும்.467710939

எல்லோருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Advertisements

3 thoughts on “மஹாராஷ்டிராவில் தீபாவளி

  1. நாம கூட மகாராஷ்டிராவில் பிறந்திருக்கலாம் போலிருக்கே!
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s