மனைவி சொல்லே மந்திரம்

download

ஒரு முறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர் பீர்பாலுக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது  மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள் என்று பீர்பால் கூறினார். அக்பருக்கு மகா கோபம்  அதெப்படி இவ்வாறு பொதுமைப்படுத்தி இப்படி கூறலாம்? நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவி சொற்படி கேட்காதவர்களாகவும் இருப்பர் இது அக்பரின் கட்சி.

வாக்குவாதம் முற்றியது. டில்லி மாநகரில் மனைவிக்கு பயப்படாத கணவனைக் காட்டுவதாகச் சொல்லி தம் கட்சியை நிரூபிக்க அக்பர் பீர்பாலைத் தம்முடன் அழைத்தார். டில்லியின் பெரிய மைதானத்தில் வந்து கூடுமாறு டில்லியின் மணமான ஆண்களையெல்லாம் தண்டோராப்போட்டு அழைத்தார். அவ்வாறே அந்த மைதானத்தில் அனைவரும் கூடினர்.

பீர்பால் ஓர் அறிவிப்பு செய்தார். “ இந்தக் கூட்டத்தில் யார் யாரெல்லாம் தம்முடைய மனைவிக்குப் பயப்படுபவர்களோ மனைவியின் பேச்சைக் கேட்கிறவர்களோ அவர்களெல்லாம் வலது பக்கம் செல்லுங்கள்” முதலில் சிறுகச்சிறுக பின்னர் பெருமளவில் அனைவரும் வலப்பக்கம் சென்று நின்றனர்.

திடீரென்று ஒரே ஒருவன் மட்டும் தயங்க் தயங்கிப் பார்த்துவிட்டு அந்த மனைவியர் சொல் விளங்கும் பெருமாள்கள் கூட்டத்தினின்ரு வெளிப்பட்டு இடப்பக்கம் சென்று ஒதுங்கி நின்று கொண்டான். அக்பர் ஆரவாரித்தார். அதோ ஓர் உண்மையான ஆண்மகன்.maxresdefault

பொறுங்கள் மன்னா அவனை விசாரிப்போம் என்றார் பீர்பால். தொடர்ந்து அந்த ஆளை அருகில் அழைத்து வரச்சொன்னார். “ ஏனப்பா நீ ஏன் மனைவியின் சொல்படி கேட்கும் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்தாய்?” அவன் சொன்னான்  “ நான் வீட்டை விட்டு வரும்போது பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேரவேண்டாம் ‘ என்று என் மனைவி எச்சரித்து அனுப்பிவைத்தாள். ஆகவேதான் நான் கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன். பீர்பாலின் முகத்தில் புன்முறுவலும் அக்பரின் முகத்தில் ஆச்சர்யமும் வெளீப்பட்டன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s