ஆஹா தகவல்

439678949_a3080c2233_b

விழுப்புரம் பஞ்சவடியிலுள்ள ஜயமங்கள ஆஞ்சனேயர் கோயில் பிரம்மாண்டமானது.  கோயில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோபுரம் 118 அடி உயரமும் கோபுர கலசம் மட்டும் ஐந்து அடி உயரமும் கொண்டது. மூலவர் 36 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அபிஷேகம் செய்ய லிஃப்ட் பயன்படுத்தப்படுகிறது. அபிஷேகத்திற்கு 1008 லிட்டர் பால் தேவை, கோயில் மணி 1200 கிலோ எடை கொண்டது. மணி ஓசை எட்டு கிமீ தூரம் கேட்கும்.download (3)

பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும்போது அதில் பச்சை நிற சதுரத்தின் உள்ளே பச்சை நிற வட்டம் குறியூடாகப் போடப்பட்டால் அது சைவ உணவாகும் [ முழுவதும் தாவரங்களிலிருந்து தயார் செய்யப்பட்ட பொருள் ] சிவப்பு நிற சதுரத்தின் உள்ளே சிவப்பு நிற வட்டம் குறியீடாகப் போடப்பட்டால் அது அசைவ உணவாகும். [ மிருகங்களில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருள் இதில் கலந்துள்ளது ]download (2)

சர்வதேச அளவில் உலகம் முழுவதும் அமைதியை விரும்புவோரின் அமைப்பே அம்னெஸ்டி இண்டர் நேஷனல் ஆகும். முக்கியமாக தனிமனித உரிமை சுதந்திரம் மற்றும் உயிர் உடைமைகளின் நலனிற்கு குரல் கொடுத்து நிலை நாட்ட உழைக்கும் இந்த தயாள அமைப்பு எந்தக் கட்சிக்கோ அரசுக்கோ சொந்தமானதல்ல. சர்வதேச அளவில் பொது அமைதியில் நாட்டமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து லண்டனை மையமாகக் கொண்டு 1961ல் ஆரம்பிக்கப்பட்டது. 1977 டிசம்பரில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் மூலம் பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான நிரபராதிகள் அப்பாவிகள் பல்வேறு கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர்.1902988_623171217750973_1069168414_n

அக்குபங்சர் மருத்துவ முறைப்படி நம் கையின்  ஆள்காட்டி விரலில் பெருங்குடலோடு இணையும் அக்கு புள்ளிகள் உள்ளன. நாம் காலையில் பல் துலக்கும்பது ஆள்காட்டிவிரலால் பற்கள் மற்றும் ஈறுகள் மேல் அழுத்தம் கொடுத்து தேய்க்கும்போது  மலக்குடல் தூண்டப்பட்டு மிக எளிதாக மலம் வெளியேற துணை புரிகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் ஆள்காட்டி விரலால் பற்கள் சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றி உள்ளனர். நாமும் இம்முறையைப் பின்பற்றலாமே.download (1)

ஆசியக் கண்டத்தில் குறிப்பாக ஊட்டியில் விளையும் துரியன் என்ற முள் நாரிப்பழம் பழங்களின் கடவுள் என்று அழைக்கப்படுகிறது.  இது பலாப்பழம் போன்ற தோற்றமளிக்கும். பலாப்பழத்தில் முட்கள் இருப்பதுபோல் இதன் மேல் தோல் உள்ளது  ஆனால் பலாப்பழத்தைவிட அளவில் சிறியது. ஆகஸ்ட் மாதமே இதன் அறுவடைக்காலம். இந்தப் பழம் மலட்டுத்தன்மையை நீக்கும்  ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆனால் இதன் மணம் பலருக்குப் பிடிக்காது.download

பூஜைகளில் வாழைப்பழம் முக்கிய இடம் பெறுகிறது.  பேய்கள் வசிக்கும் நாட்டில் பேயனாக நடமாடும் ஈசன்  பேயன் வாழையிலும் முகுந்தனாகிய விஷ்ணு மொந்தன் வாழையிலும் தாமரைப்பூவில் உதித்த பிரம்மன் பூவன் வாழையிலும் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். அதனால் வாழைப்பழம் இறை பூஜையில் உயர்வான இடத்தைப்பெறுகிறது.3553140_s1_i2

அழகான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் செய்யப்பயன்படும் இளஞ்சிவப்பு அல்லது ரோஸ் நிற கற்கள் அர்ஜென்டினா நாட்டில் அபரிதமாகக் கிடைக்கின்றன. இது மிருதுவான கல் என்பதால் லேசாகத்தான் பட்டை தீட்ட முடியும். இது அர்ஜென்டினாவின் தேசிய ரத்தினம் ஆகும். இதன் நிறத்தால் இதை இன்கா ரோஸ் என்றும் அல்மா கிங் என்றும் அழைக்கிறார்கள்

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s