நம்பினார் கெடுவதில்லை

ST_20140103155807361844

ஒரு மடத்தில் இருந்த துறவி ஏழைகளுக்கு விருந்தளிக்க விரும்பினார் ஆனால் கையில் பணமில்லை.  “ கடவுளே விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் “ என்று வேண்டிக்கொண்டார். தன் சீடர்களை அழைத்து விருந்துக்கான ஏற்பாட்டை செய்யும்படி கூறினார். விருந்து அன்று ஏராளமான முதியவர்கள் ஆசையோடு காத்திருந்தார்கள். தட்டு தண்ணீர் வைத்தாகி விட்டது.

சீடர்கள் தங்கள் மனதிற்குள் “ நம் குருவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலும் உணவே இல்லாமல் வெறும் தட்டு முன் முதியோர்கள் அமர்ந்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள் என்பது கூட இவருக்கு தெரியாதா?”  என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர்.ST_20150707162834009217

நேரம் கடந்தது. சீடன் ஒருவன் குருவிடம் “ இப்போது என்ன செய்வது/ “ என்றான். “ கவலை வேண்டாம் உணவு அளிப்பது கடவுளின் பொறுப்பு எல்லாரையும் அமரச்சொல்லுங்கள் “ என்றார். என்ன நடக்கப்போகிறதோ என எல்லாரும் திகைத்து நிற்க குரு மனஒருமையுட்ன் கடவுளைப் பிரார்த்தித்தார். அப்போது வாசலில் வாகனம் ஒன்று வந்தது. அதில் தேவைக்கு நிறைய உணவும் இருந்தது. அந்த வண்டியை ஓட்டிவந்தவர் குருவிடம் ‘ குருவே எங்கள் முதலாளி இந்த விருந்தை உங்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். “ என்றனர். நடந்த விஷயம் இதுதான். பணக்காரனான அந்த முதலாளி தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஏதோ காரணத்தினால் விருந்து தடைப்பட்டதால் உணவை ஏழைகளுக்கு வழங்க முடிவெடுத்து அனுப்பி வைத்தார்.

“ பெரிய முதலாளியான கடவுளின் உத்திரவால் இந்த உணவு கிடைத்துள்ளது அவருக்கு நன்றி சொல்லி விருந்தை பரிமாறுவோம்” என்று சீடர்களுக்கு உத்திரவிட்டார். எதிர்பார்த்ததை விட விருந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s