தாமதமா………………. வேண்டவே வேண்டாம்

கால தாமதம் என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. தாமதமா வந்ததைப் போயி பெரிசா பேசறீங்களே என்று கூட சிலர் கோபிப்பதுண்டு. கால தாமத்தின் விபரீதத்தைய்ச் சொல்லும் கதை இது.

download (3)

தேவலோக சபைக்கு வந்த தேவேந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டான். எல்லா தேவர்களும் அவனுக்கு முன்பாக வந்து காத்திருந்தார்கள் காமதேனு மட்டும் நீண்ட நேரம் கழித்தே சபைக்கு வந்தது. இந்திரனுக்கு கடும் கோபம் “ காமதேனுவே காலம் கடன்கு வந்த் மீ பூலோகத்ஹ்டில் காட்டுப்பசுவாக பிறப்பாயாக “ என்று சபித்தான்.

காமதேனு இந்திராணியிடம் சென்று அழுதது. இந்திராணி காமதேனுவிடம் “ கவலைப்படாதே பூலோகத்தில் வகுளாரண்ய க்ஷேத்திரம் சென்று சிவபெருமானை வழிபடு. சாப விமோசனம் உண்டாகும் “ என்று வழிகாட்டினாள்.  கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவைத் திறந்துவிட்டாரே என்று காமதேனுவுக்கு ஆறுதல்……download (2)

அது பூவுலகில் கபில முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தது. முனிவரின் ஆணைப்படி தினமும்  காது மடலில் கங்கை நீரை ஏந்திச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டது. சாப விமோசனம் கிடைக்கும் காலம் நெருங்கியது. ஒரு நாள்…………

வழிபாட்டுக்குச் செல்லும் வழியில் அந்தப் பசுவை சிவன் வேங்கைப்புலியாக மாறி வழி மறித்தார். பயம் சிறிதும் அற்ற பசு   “ புலியே என் அன்றாடக் கடமையான சிவ வழிபாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்  திரும்பி வரும்போது என்னை நீ உணவாக்கிக் கொள்” என்றது. புலியும் சம்மதித்தது.

சொன்ன வாக்கு தவறாமல் பசு சிறிது நேரத்தில் திரும்பி வர புலி அங்கு தென்படவில்லை. சத்திய நெறி தவறாத பசுவின் முன் சிவன் தன் துணைவி பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். பசு சாபவிமோசனம் பெற்று காமதேனுவாக தேவலோகத்தை அடைந்தது.download

வேங்கை வடிவில் சிவன் தோன்றிய இடம் வேங்கைவாசல் என அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டை அருகிலுள்ள இத்திருத்தலம் பசு தன் காதில் கங்கை நீரை ஏந்தி வந்து அபிஷேகம் செய்ததால் கோகர்ணம் என பெயர் பெற்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s