வசதி போய்விட்டால்………………….

download

ஒரு எஜமானன் தன் பயணத்துக்காக ஒரு குதிரையையும் தன் சுமைகளை கொண்டு செல்ல ஒரு கழுதையையும் வளர்த்தார். குதிரைக்கு நல்ல வகை உணவு தரப்பட்டது. அலங்கார சேணம் கழுத்தைச் சுற்றி வெள்ளியால் ஆன பட்டையால் அலங்கரிக்கப்பட்டது. தினமும் அதை இள வென்னீரில் குளிப்பாட்டி வாசனை திரவியங்களை உடலில் தடவியதால் பெருமையுடன் திரிந்தது.

கழுதையோ வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டது. சாதாரண உணவு தான் தரப்பட்டது. எப்போதாவது ஒரு முறைதான் ஆற்றிற்கு கொண்டுபோய் குளிப்பாட்டுவார்கள். இப்படி கஷ்டப்படும் கழுதையை ஏளனமாகப் பார்த்தது குதிரை. “ நம் எஜமான் என்னை எப்படி கவனிக்கிறார் பார்த்தாயா? “ என பீற்றிக்கொண்டது. ஒரு நாள் எஜமானனைச் சுமந்து சென்ற குதிரை ஒருபள்ளத்தைத் தாண்டும்போது அதனுள் தவறி விழுந்து விட்டது. எஜமானனுக்கும் குதிரைக்கும் பலத்த காயம். ஆத்திரத்தில் குதிரையை நைய்யப்புடைத்து விட்டார். இந்தக் குதிரை இனி சவாரிக்கு ஆகாது எனக்கருதி கழுதையைப் போல்  மூட்டை சுமக்க வைத்து விட்டார்.

இப்போது குதிரை ‘ உன்னைக் கேலி செய்ததற்கான விளைவை அனுபவிக்கிறேன்  கஷ்டப்படுபவர்களின் மனதை புண்படுத்துவது பெரிய பாவம் என்பதை உணர்ந்துகொண்டேன் என்னை மன்னித்துவிடு ‘ என்றது. இன்பவாழ்வு நிரந்தரமானதல்ல நன்றாக இருக்கும் வரை தான் உலகம் வாழ்த்தும் வசதி போய்விட்டால் வசை தான் கிடைக்கும் எனவே எவ்வளவு பணமிருந்தாலும் அடக்கமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.

Advertisements

One thought on “வசதி போய்விட்டால்………………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s