பறந்து வரும் விருந்தினர்கள்

pigeons_001என் வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டில் ஆறுமாதத்திற்கு முன்பு புதிதாக ஒரு குடும்பம் குடி வந்தது.  அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் ஒரு புறாக்கூண்டு.  சுமார் 30 புறாக்கள் இருக்கும்.  காலையில்  நான்  நடைப்பயிற்சிக்கு சென்று திரும்பும் நேரம் அது திறக்கப்பட்டு அந்த வீட்டின் சொந்தக்காரர் அதற்கு தானியங்கள் இறைப்பதையும் அவைகள் மகிழ்ச்சியில் குரலெழுப்பிக்கொண்டு அவற்றைப் பறந்து பறந்து கொத்துவதையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வருவேன்  இளம் காலை வேளையில் அந்தக் காட்சி  மனதிற்கு ரொம்பவும் இனிமையாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.

IMG_30102015_163514

சில நாட்கள் ஆனதும் என் வீட்டின் தோட்டத்தில் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் கொஞ்சம் கம்பு கேழ்வரகு என போட ஆரம்பித்தேன்.  ஒரு சில நாட்கள் எதுவும் வரவில்லை. எறும்புகள் தான் எடுத்துச் சென்றன. ஆனாலும் நான் மனம் தளரவில்லை  தினமும் அலுக்காமல் போட்டுவந்தேன்.  எறும்பும் வாயில்லா ஜீவன் தானே திங்கட்டுமே என்று.  ஒரு நாள் மத்யானம் கொல்லையில் உட்கார்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது  இரண்டு புறாக்கள் என் கிண்ணத்திலிருந்தும் தானியங்களை கொத்துவதைப் பார்த்து மகிழ்ந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தன. இப்போது அவைகளுடன் சில மைனாக்களும்  சில குருவிகளும் கூட வந்து கொத்த ஆரம்பித்துள்ளன.  காலையில் சில புறாக்களும் மதியம் வேளைகளில் அதிகமாகவும் பறவைகள் வந்து மகிழ்ச்சிக்குரலெழுப்பி தானியங்களை கொத்துவதை பார்ப்பது என் அன்றாடபொழுதுபோக்கில் ஒன்றாகிவிட்டது.butterfly-on-butterfly-bush-500x333என் வீட்டில் உள்ள செடிகள் எல்லாம் இப்போது பூக்க ஆரம்பித்துவிட்ட காரணத்தால் நிறைய பட்டாம்பூச்சிகளும் அவைகளைச் சுற்றி வட்டமிடுகின்றன. பறந்து வந்து எங்களை ஆனந்தப்படுத்தும் இந்த விருந்தினர்களை எத்தனை உபசரித்தாலும் தகும்Chinnu-Patti-Birds

சமீபத்தில்  நவராத்திரி விடுமுறைக்கு என் பேரன் சின்னு வந்திருந்தபோது அவைகளைப் பார்த்து மகிழ்ந்ததுடன் அவனும் தினமும் அவற்றிற்கு தானியங்கள் கொடுத்து மகிழ்ந்தான்.  செடிகளுக்கு காலையும் மாலையும் என்னோடு தண்ணீர் விடுவதை பழக்கிக்கொண்டான்.  பாட்டியும் பேரனும் பறந்து வரும் விருந்தினர்களுடன் நவராத்திரியைக் கொண்டாடினோம் என்றால் மிகையாகாது. .

Advertisements

One thought on “பறந்து வரும் விருந்தினர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s