ஆஹா டிப்ஸ்

sudndai

வயிற்றுப்பூச்சிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகர் எதுவும் இல்லை. எனவே அடிக்கடி உணவில் சுண்டைக்காய் சேர்த்துக்கொள்பவர்களுக்கு நச்சுக்கிருமிகள் உடலில் தங்காது. வாயு பிரச்னை உள்ளவர்களுக்கு சுண்டைக்காய் நல்ல மருந்து இது மட்டுமல்ல. சுண்டைக்காயை நுண்ணூட்டச் சத்துக்களின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம்.இதில் விட்டமின் ஏ பீட்டா கரோட்டின் சி இ போன்ற சத்துக்கள் எக்கச்சக்கமாக அடங்கியுள்ளன. மேலும் ரத்தக்குழாயில் கொழுப்பை படியவிடாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.13-snack-gourd-kootu

தேங்காய் இல்லாமலே சுவையான கூட்டு செய்யவேண்டுமா/ உளுத்தம் பருப்பு  அரை கப் பாசிப்பருப்பு கால் கப் கறிவேப்பிலை கால் கப் எடுத்து பொன்னிறமாக வறுத்து ரவை பதத்திற்கு உடைத்து வைத்துக்கொள்ளவும். கூட்டு கொதிக்கும்போது இரண்டு ஸ்பூன் கலந்துவிட சுவை பிரமாதமாக இருக்கும்pppppppp

தீபாவளிக்குப் பட்சணங்கள் வைத்திருக்கும் பாத்திரத்தில் ஒரு வெள்ளைத்துணியில் கொஞ்சம் கல் உப்பை சிறு மூட்டையாகக் கட்டி போட்டு வைத்தால் பட்சணங்கள் நமுத்துப்போகாமல் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும் அதேபோல பட்சணங்கள் தீர்ந்தபிறகு பாத்திரங்களை தேய்ப்பதற்கு முன்பாக எலுமிச்சம்பழத் தோல் கொண்டு முதலில் தேய்த்துவிட்டு பிறகு க்ளீனிங் பவுடரைக்கொண்டு தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும். எண்ணெய் பிசுக்கு இருக்காது.download

வெயில் காலத்தில் சமையல் அறையில் எறும்புகள் ஆங்காங்கே வரிசைக்கட்டி செல்லும். இதனை தடுக்க எறும்பு எங்கேயிருந்து வருகிறது என பார்த்து அங்கிருந்து மஞ்சள் பொடியும் உப்பும் கலந்து தூவினால் எறும்பு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். செடிகளில் எறும்பு வந்தாலும் இதையே செய்யலாம்.kovilpatti-mat

தினமும் ஒரு மணி நேரம் தரையில் கோரைப்பாயை விரித்து தலையணை இல்லாமல் படுத்து ஓய்வெடுத்தால் மூளைக்கு ரத்தஓட்டம் நன்றாக இருக்கும். இதனால் ரத்த அழுத்தம் வரவே வராது. இடம் மாறி நாம் புது தண்ணீரில் குளிக்க  நேர்ந்தால் அந்தத் தண்ணீரை சிறிது வாயில் அடக்கிக்கொண்டு தலைக்கு ஊற்றி குளித்தால் சளிப்பிடிக்காது.ujala

துணிகளுக்கு நீலம் போடுவதற்கு தண்ணீரில் நீலத்தைக் கலக்கும்போது சிறிது வாஷிங் சோடாவையும் சேர்க்கவேண்டும். பின்னர் துவைத்த துணியை அதில் முக்கி எடுத்தால் நீலம் திட்டு திட்டாக இல்லாமல் துணியில் சீராக பரவியிருக்கும் துணியும் பளிச்சிடும்.water

வீட்டில் உள்ள எவர்சில்வர் தண்ணீர் குழாய்களின் மேலே உப்புப் படிந்து மங்கலாக இருக்கும் அதன் மேல் விபூதி உப்புக் கலந்த கலவையைப் பூசி பத்து நிமிடம் ஊற வைத்துத் தேய்த்து கழுவினால் குழாய் புதியதுபோல் பளிச்சிடும்.

Advertisements

2 thoughts on “ஆஹா டிப்ஸ்

  1. வணக்கம் வலைச்சித்தரே நீங்கள் வந்தபின் களை கட்டிவிட்டது என் பதிவுகள் பின்னூட்டத்திற்கு நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s