ஆஹா பாட்டி வைத்தியம்

download (2)

கருஞ்சீரகம் 50 கிராம் ஓமம் 100 கிராம் வெந்தயம் 250 கிராம் இம்மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து பத்திரப்படுத்தவும். வாயுத்தொல்லை  அஜீரணம் மலச்சிக்கல் போன்ற ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் பால் அல்லது வென்னீரில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து பருக உடனே நிவாரணம் கிடைக்கும்.E_1441622534

வாயில் புண் என்றால் ஒரு துண்டு மாசிக்காய் ஒரு துண்டு பிஞ்சுக்கடுக்காய் இரண்டையும் வாயில் அடக்கிக்கொண்டு இரவில் படுக்கவும். காலையில் வாய் மரத்துப்போனது போல் இருக்கும். ஆனால் வாய்ப்புண் வயிற்றுப்புண் இரண்டுமே குணமாகிவிடும். மரத்துப்போனது போல் இருப்பது காலையில் ஒன்றிரண்டு மணி நேரத்தில் சரியாகிவிடும்.kaalaani

விரலி மஞ்சள் 2  கற்பூரம் 2 மருதாணி ஒரு கைப்பிடி வசம்பு ஒரு துண்டு இவற்றை எடுத்துக்கொள்ளவும். வசம்புத்துண்டைத் தட்டி ஊறவைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்து கால் ஆணியின் மீது சிறிது வைத்து வெள்ளைத் துணியால் இரவில் கட்டிவிடவும். தொடர்ந்து பத்து நாட்கள் இப்படி செய்து வந்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் கரைவதோடல்லாமல் பாதம் மிருதுவாகி வலி சுத்தமாக மறைந்துவிடும். ஆ என்று வலியால் துடித்தவர்கள் இதனைப் பூசி குணமடைந்த பின் ஆஹா என்று நிம்மதியடைவார்கள்.download

பிரண்டையைப் பறித்து தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய்யில்  நன்கு வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நன்றாக காய வைத்து டப்பாவில் பத்திரப்படுத்தவும். இதை காலையிலும் மாலையிலும் பால் அல்லது வென்னீருடன் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s