ஆஹா தகவல்

download

உலகின் பத்து அழகிய அரண்மனைகளில் ஒன்று சீனத் தலை நகர் பெய்ஜிங்கில் இருக்கிறது. பெய்ஜிங் நகரின் நடு நாயகமாக விளங்கும் இது 7.2 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை வளாகத்தில் 980 கட்டடங்கள் 8707 அறைகள் உள்ளன. இதனைச்சுற்றி 6 மீட்டர் ஆழமும் 10 மீட்டர் உயரமுள்ள மதில் சுவருடன் கூடிய அகழி கட்டப்பட்டுள்ளது. இதன் முன் வாசலிலிருந்து பின் வாசல் வரை இடைப்பட்ட தூரம் 960 மீட்டர் ஆகும். இந்த அரண்மனையை ஆண்டிற்கு ஒரு கோடி பேர் பார்வையிடுகின்றனர்.

MTIwNjA4NjMzOTY0MjM0MjUyபோலியோவை ஒழிக்க உலகிலேயே முதல் முதலில் மருந்து கண்டுபிடித்தவர் ஜோனாஸ் எட்வர்ட் சால்க். 1939 ல் நியூயார்க் பல்கலைகழகத்தில் எம் டி பட்டம் முடித்துவிட்டு தொடர்ந்து வைரஸ் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்து சால்க் மூன்று வகையான  போலியோ வைரஸ்களைக் கண்டறிந்தார். 1977ல் ஜவகர்லால் நேரு விருதை பெற்றார். இன்று உலகில் பல்லாயிரக்கணக்கான் குழந்தைகள் ஊனமின்றி வாழ்வதற்கு இவரே வித்திட்டார்.

download (1)உலக அளவில் பாதுகாப்பான நாடு எது என்று 107 நாடுகளில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பெற்றது. குற்ற நடவடிக்கை சுற்றுச்சூழல் பராமரிப்பு பிறப்பு இறப்பு விகிதம் போன்ற அம்சங்களை வைத்து தேர்வு செய்யப்பட்டது. இதில் இரண்டாவது இடத்தை சிங்கப்பூரும் மூன்றாவது இடத்தை ஸ்பெயினும் பெற்றன. இதில் இந்தியா 107வது இடத்தையும் இலங்கை 63ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

deviCat114Bநாயன்மார்களில் விசேஷ பெருமை பெற்ற காரைக்கால் அம்மையார் ஈசனாலேயே அம்மையே என்று அழைக்கப்பட்டவர் அம்மையாரின் புகழ் நம் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ளது.  வியட் நாமில் பாங்குலே என்னும் ஆலயத்தில் 16 கரங்களுடன் கூடிய நடராஜர் சிலைக்கு முன்பாக காரைக்கால் அம்மையாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கையில் தாளத்துடன் கூடிய செப்புச்சிலை கிடைத்துள்ளது. சுமத்ராவில் காரைக்கால் அம்மையாரின் பேய் உருவச் சிலை வரையப்பட்டுள்ளது. தாய்லாந்தில் பீமாய் என்னும் இடத்திலும் கம்போடியாவிலும் அவருக்கு கோயில் கட்டி வழிபடுகிறார்கள்.

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் நவராத்திரி நலவாழ்த்துக்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s