டிப்ஸ் விருந்து

DSC02759

பாலக் கீரையின் இலையை மட்டும் நறுக்கி கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி அதனுடன் நாலு ஸ்பூன்  துருவிய தேங்காய் இரண்டு பச்சை மிளகாய் அரை ஸ்பூன் சீரகம் உப்பு சேர்த்து அரைக்கவும். இதனை ஒரு ஸ்பூன் எண்ணெயில் மறுபடியும் நன்றாக வதக்கவும். இரும்புச்சத்து நிறைந்த அருமையான ருசியான பாலக் சட்னி தயார்.415c1-kuzi2bappam

இட்லி மாவு கடைசியில் கொஞ்சம் மிச்சம் இருக்கும்போது இட்லி செய்தால் கல் போல் இருக்கும். அதனால் அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் தேங்காய் துர்வல் சேர்த்து அப்பக்குழியில் அப்பங்களாக வேகவிட்டு மாலை நேர டிபனாக மாற்றிவிடலாம்.download

,மாங்காய் தொக்கு போடுவதற்கு மாங்காய்களை சிரமப்பட்டு துருவிக்கொண்டு இருக்கவேண்டாம். தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து விட்டால் தொக்கு செய்ய சுலபமாக இருக்கும்.

புளிப்பான மாங்காய்களை தோல் சீவி துருவி வெயிலில் உலர்த்தினால் ஒன்றிரண்டு நாட்களில் சருகாக உலர்ந்துவிடும். அதை மிக்ஸ்யில் பொடித்து வைத்துக்கொண்டால் புளிப்பு சுவை தேவைப்படும் அயிட்டங்களில்ல் உபயோகித்துக் கொள்ளலாம். கடையில் தனியாக ஆம்சூர் பொடி வாங்கத் தேவையில்லை.pressure_cooker

குக்கரில் பொருட்களை வேக வைக்கும்போது தேவையான விசில் சத்தம் வந்ததும் உடனே அடுப்பை அணைக்காமல் அடுப்பை சிம் மில் இரண்டு நிமிடங்கள் வைத்தபின் அணைத்தால் பொருட்கள் சரியான பதத்தில் வெந்திருப்பதுடன் குக்கரையும் வழக்கைத்தைவிட சீக்கிரம் திறக்கலாம்.img_2013c

இஞ்சி பூண்டு கொட்டைப்பாக்கு அளவு புளி எடுத்து மிக்ஸ்யில் அரைத்து தண்ணீர் விட்டு நீர்க்கக் கரைத்துக் கொள்ளுங்கள். இதில் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டுங்கள்  அபார ருசியோடு நொடியில் ரசம் தயார்.main-qimg-7ad8aafd9bb56ff3acb2dcae045de746

நீர் மோர் கரைக்கும்போது சிறிது புளிக்காய்ச்சலையும் சேர்த்து கரைத்துவிட்டால் போதும் வேறு எதுவும் சேர்க்காமல் நீர் மோர் சுவையாக இருப்பதுடன் வாசனையும் தூக்கலாக இருக்கும். புளிப்பில்லாத மோரில் புளிப்புச் சுவை கூட்டவும் இப்படி செய்யலாம்.13

பால் குறைவாக இருந்தாலும் ருசியான பாயசம் தயாரிக்கலாம். இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் ஜவ்வரிசியை சிறிது நேரம் வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து சூடான பாயசத்தில் கலந்து விடுங்கள் பாயசம் கெட்டியாகவும் நிறைவாகவும் இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s