ஆஹா பாட்டி வைத்தியம்

download (3)

அஜீரணக் கோளாறு வாயுத்தொல்லை போன்ற உபாதைகளுக்கு ஒரு துண்டு சுக்கை நன்றாகத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு அந்தத் தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். தாகம் ஏற்படும் போதெல்லாம் இந்தத் தண்ணீரை குடித்துவர அஜீரணக்கோளாறுகள் அனைத்தும் நீங்கி நன்றாகப் பசி எடுக்கும் விருந்து சாப்பாடு உண்டவர்களும் இந்தச் சுக்கு தண்ணீரை குடிக்க எளிதில் ஜீரணமாகும்.download (1)

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து சாப்பிடவும் அல்லது செம்பருத்திப்பூவை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர ரத்தபோக்கு கட்டுப்படும்.  புதினா இலையின் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து குடிக்க மாதவிலக்கு ஒழுங்குபடும். மலை வேம்பு எண்ணெய் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட மாதவிடாய் வலியில்லாமல் இருக்கும். தினமும் அன்னாசிபழம் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும். ரோஜா குல்கந்து காலை மாலை இருவேளையும் கொடுத்துவர கர்ப்பப்பை பலமடையும்.5296551

சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுவது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்  சிறுநீர் சுருக்கு  போன்ற பாதிப்புக்களுக்கு கால் பெருவிரல் நகம் மீது சிறிது சுண்ணாம்பைத் தடவி விடவும். தடவி ஒரு மணி நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.ThengaiPalRasam_zps4b7f9f29

அரை லிட்டர் பாலுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து ஒரு கப் புழுங்கல் அரிசி அரை கப் பூண்டு உரித்தது சிறிதளவு வெந்தயம் சீரகம் சேர்த்து வேகவைக்கவும். அதில் ஒரு மெல்லிய காட்டன் துணியில் கண்டதிப்பிலி அரிசி திப்பிலி சித்தரத்தை அதிமதுரம் போன்றவற்றை சிறிதளவு வைத்து மூட்டைகட்டி வேகும் கஞ்சியில் போட்டு கஞ்சி வெந்ததும் மூட்டையை எடுத்துவிடவும் இந்தக் கஞ்சியைப் பாலூட்டும் தாய்மார்கள் அருந்த பால் நன்றாகச் சுரக்கும்.download

கூந்தல் கருமையாக வளர செம்பருத்தி பூக்களை பறித்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இந்த தைலத்தை தலைக்குத் தேய்த்துவர கூந்தல் நீண்டு வளரும்  மூளையும் கண்களும் குளிர்ச்சி பெறும் தலையில் பொடுகும் வராது.bo247

புங்க எண்ணெய் விளக்கெண்ணெய் நல்லெண்ணெய் வேப்ப எண்ணெய் இலுப்பெண்ணெய் தலா 100 கிராம்  எடுத்து ஒன்ராக கலக்கவும். மிளகு ஒரு ஸ்பூன் சுக்கு அரை ஸ்பூன் பச்சைக்கற்பூரம் ஒரு துண்டு ஆகியவற்றை பொடி செய்து எண்ணெயில் கலந்து  நன்றாகக் காய்ச்சி ஆற விடவும் பாதம் குதிகால் வலி குறிப்பாக மூட்டுவலிக்கு தடவிவர முற்றிலும் குணமாகும்.

Advertisements

One thought on “ஆஹா பாட்டி வைத்தியம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s