என்னையும் மருத்துவராக்கு

ramakrishna_seated_midsizencdas

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணர் தக்ஷிணேஸ்வரத்தில் காளி கோயில் பூசாரியாகப் பணி செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் பக்தர் ஒருவர் அவரிடம் ‘ நீங்கள் காளி மாதாவை பார்த்திருக்கிறீர்களா? ‘ என்று கேட்டார். அதற்குத் தாம் காளி மாதாவைப் பார்த்திருப்பதாக சொன்னார் சுவாமிகள்.

‘ அவளுடன் பேசியிருக்கிறீர்களா’? எனக்கேட்டார் பக்தர். ‘ இன்று காலை கூட பேசினேனே ‘ என்றார் ராமகிருஷ்ணர். உடனே அந்த பக்தர் எனக்கும் காளியைப் பார்க்கவேண்டும் காட்ட முடியுமா? எனக் கேட்டார்.

“ நீங்கள் என்ன உத்யோகம் பார்க்கிறீர்கள்’? எனக்கேட்டார் பகவான். பக்தர் “ நான் ஒரு மருத்துவர்” என்றார். “ “அப்படியானால்  என்னையும் ஒரு மருத்துவராக்கி விடுங்கள்” என்றார் பகவான். “ அதெப்படி சாத்தியம்? மருத்துவராவதற்கு அதற்குரிய பாடதிட்டங்களைப் படிக்கவேண்டும். பரிசோதனைகள் பயிற்சிகள்……இன்னும் பலப்பல………….. அதற்கெல்லாம் பல ஆண்டுகள் பிடிக்கும். அதன் பிறகும் தொழில் அனுபவம் பெற்றால்தான் முழு வைத்தியராக முடியும் ‘ விளக்கினார் பக்தர்.

“ இங்கேயும் அதேதான் கடவுளைக் காணப் பலகாலம் பல பிறவிகள் கூட ஆகலாம். கடினமான சாதனைகள் செய்ய வேண்டும்” என்று தெளிவு படுத்தினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s