ஆஹா டிப்ஸ்

latte

இருமல் அதிகமாக இருந்தால் சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி  இரண்டு பற்கள் பூண்டு போட்டு காய்ச்சி இரவு படுக்கும் முன் சாப்பிட்டால் குணம் தெரியும்.img1120922005_1_1

இஞ்சியை மிக்சியில் அரைத்து ஒரு டீஸ்பூன் சாறு எடுத்து தேன் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். கை கால் விரல்களில் அடி பட்டவுடன் மஞ்சள் தூளை வைத்து அமுக்க வேண்டும். இதனால் செப்டிக் ஆகாமல் இருக்கும் ரத்தமும் நின்றுவிடும். அடிபட்டவுடன் ஐஸ்கட்டியும் வைக்கலாம் வீங்காமல் இருக்கும்.

The air conditioning control dials in a car's control panel.
The air conditioning control dials in a car’s control panel.

கார் ஓட்டும்போது குளிர் சாதனத்தை உபயோகிப்பார்கள். அப்படி உபயோகிக்கும்போது கேபினில் தேவையான அளவுக்கு குளிர் வந்தவுடன் ஏசியை நிறுத்திவிட்டு பிறகு குளிர் குறைந்தவுடன் ஆன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் எரிபொருள் சிக்கனமாகும். கிளஸ்டரில் உள்ள ஸ்பீடா மீட்டர்  டெம்பரேச்சர் கேஜ் பியூயல் கேஜ் ஆகிய மூன்றையும் அடிக்கடி கவனித்து வாகனத்தை ஓட்டுவதால் விபத்துக்களை தவிர்க்கமுடியும். met

வீட்டில் இருக்கும் அலங்கார கண்ணாடிகளைத் துடைக்க எலுமிச்சைச் சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பழைய நியூஸ்பேப்பரால் துடைக்கவும். இதனால் பிசுபிசுப்பு நீங்குவதோடு முழு அழுக்கும் நீங்கி கண்ணாடியும் பளபளப்பாகும். எலுமிச்சைச் சாறுடன் தண்ணீர் மற்றும் வினிகர் கலந்தும் பழைய துணியால் கண்ணாடியை சுத்தம் செய்யலாம்.images

தேங்காய் அழுகிவிட்டால்  ஒன்றைரை ஸ்பூன் கசகசாவை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் குளித்திட எந்த நவீன வகை ஷாம்பு போட்டுக்குளித்தும் கிடைக்காத பளபளப்பு தலை முடிக்கு கிடைக்கும்.download

உடலில் இங்க் கறை பட்டு விட்டால் நெயில் பாலீஷ் ரிமூவரை பஞ்சில்  நனைத்து கறைபடிந்த இடத்தில் நன்றாகத் துடைத்தால் இங்க் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.download (4)

கை கடிகாரத்தின் கண்ணாடியில் நிறைய கோடுகள் ஆகி மணி பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டால் நெயில் பாலீஷ் ரிமூவர் மூலம் துடைத்தால் கண்ணாடியும் பிளாஸ்டிக் டவல்ஃபேஸ்ஸூம் பளபளவென்ரு ஒளிர்ந்து மணியை நன்றாக பார்க்க உதவும்.download (3)

முகம் பொலிவுடன் இருக்க பாலேடு கலந்து கடலை மாவை குழைத்து முகத்தில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்சிடும். இதை வாரத்திர்கு இரண்டு முறையாவது செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் பதத்தில் முகம் கை கால்களில் தடவிக்கொண்டு பயத்த மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

சளித்தொல்லை இருக்கும் குழந்தைகள் கஷாயம் சாப்பிடப் படுத்தும். கைப்பிடி துளசியை அரைத்து தோசை மாவில் கலந்து கடுகு தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை மிளகுப்பொடி கலந்து மூலிகை தோசை செய்து கொடுங்கள்  குழந்தை அழகாக சாப்பிட்டுவிடும். சளி இருமல் தொல்லையும் நீங்கிவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s