ஆஹா தகவல்

ambedkar-GA55_l

நமது அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள்  1920களில் லண்டனில் உயர்கல்வி பயின்றபோது வடமேற்கு லண்டனில் கிங் ஹென்றிஸ் சாலையில் உள்ள 2050 சதுர அடி கொண்ட மூன்றடுக்கு பங்களாவில் வசித்து வந்தார். இந்த பங்களாவை சமீபத்தில் அதன் உரிமையாளர் விலைக்குக் கொடுக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது. மஹாராஷ்டிரா அரசு அந்த வீட்டை வாங்க கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்து தற்போது வாங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் மஹாராஷ்டிராவின் சோஷியல் ஜஸ்டிஸ் மற்றும் சிறப்பு உதவி மந்திரியால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடு சர்வதேச நினைவுச் சின்னமாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.images

டி வி யை ரிமோட் கொண்டு நிறுத்தினால் மட்டும் போதாது. மெயின் ஸ்விட்சை அணைத்தால் மட்டுமே மின்சார இணைப்பு துண்டிக்கப்படும். ரிமோட்டில் அணைத்தால் மின்சாரம் வீணாகும். அதே போல் செல்ஃபோன் சர்ஜ் செய்தவுடன் செல்ஃபோன் உரன் சார்ஜரையும் மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவேண்டும்.  எல் இ டி மின் விளக்குகல் பயன்படுத்தினால் மின்சார செலவு வெகுவாக குறையும்.cna

ஆணி ஒற்றன் காலன் கீரதர் குறிப்போன் கொழு சமதர்மன் சம்மட்டி சௌமியன் துரை நக்கீரன் நீலன் பரதன் பேகன் வழிப்போக்கன் சிறைபுகுந்தோன் குயில் வீரன் வீனஸ் இவையெல்லாம்  பேரறிஞர் அண்ணாதுரையின் புனைப்பெயர்கள்  இத்தனை பெயர்களில் அவர் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார்.101208_thump

நம் தேசப்பிதா மகாத்மாவை கடவுளாகக் கருதி கோயில் எழுப்பப்பட்டு உள்ளது. இந்த அதிசய கோயில் கர்னாடகா மானிலம் சிக்மகளூர் மாவட்டம் கடூர் தாலுகாவில் உள்ள நிடகட்டா கிராமத்தில் அமைந்துள்ளது. காந்திமந்திரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோயில் 65 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட 48 மணி நேரத்தில் அவரது நினைவாக இந்தக் கோயில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி அன்று கோயில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.alamelu-manga

திருப்பதி அலமேலுமங்கை தாயாருக்கு அணிவிக்கப்படும் உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தி துணியால் உருவாக்கப்படுகிறது. செஞ்சு என்ற இன நெசவாளர்கள் மூன்று வேளை குளித்து மாமிசம் உண்ணாமல் பக்தியுடன் விரதமிருந்து தயாரித்து அனுப்புகிறார்கள்.250px-Airavateshwarar_full

அந்த காலத்தில் கோயில் கட்டும்போது ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒரு தனித்தன்மையுடன் கோயிலை வடிவமைத்தனர். ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு இருக்கும். கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் உள்ள ஐராதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது  ஆனால் ராமர் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

The Prime Minister, Dr. Manmohan Singh with the awardees of  ‘Prime Minister’s Shram Awards for the years 2005, 2006 and 2007’, in New Delhi on September 15, 2010. The Union Minister for Labour & Employment, Shri Mallikarjun Kharge and the Minister of State for Labour and Employment, Shri Harish Rawat are also seen in the picture.

பிரதம மந்தரியின் ஷ்ரம் விருது 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இவ்விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஷ்ரம் என்றால்  உழைப்பு என்று பொருள். உற்பத்தி துறையில் புதிய திறன்களை வெளிப்படுத்தியவர்கள் சவால்களை சமாளித்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதில் ஷ்ரம் ரத்னா  ஷ்ரம் வீர்  ஷ்ரம் பூஷண் ஷ்ரம் ஸ்ரீ என நான்கு வகை விருதுகள் உள்ளன  ஷ்ரம் வீர் விருதுக்கு பெண்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஷ்ரம் வீராங்கனா என அழைக்கப்படுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s