எளிய காணிக்கை

Mathura_Temple-Mathura-India0002

மதுரா நகர் அமைச்சரான திரிபுரருக்கு பதவியில் நாட்டம் குறைந்து கிருஷ்ண பக்தியில் மனம் ஆழ்ந்தது. செல்வத்தை எல்லாம் ஏழைகளுக்கு தானம் அளித்துவிட்டு எளிமையாக வாழ்ந்தார்.deities1

ஒரு நாள் மதுரா கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றார். பட்டாடை உடுத்தி மூலவர் அலங்காரமாக காட்சி அளித்தார்.  தானும் கிருஷ்ணருக்கு புத்தாடை அணிவிக்க ஆசைப்பட்டார். தன்னிடம் இருந்த பாத்திரத்தை விற்றுக் கிடைத்த பணத்தில் கைத்தறி ஆடை வாங்கினார். அர்ச்சகரிடம் கொடுத்து இறைவனுக்கு அணிவிக்க வேண்டினார். அர்ச்சகர் ஏளனமாக “ இந்த எளிய ஆடையை எப்படி அணிவிப்பது?” என்று கேட்டுக்கொண்டே தரையில் போட்டு அதில் அமர்ந்து கொண்டார்  திருபுரரின் மனம் புண்பட்டது.9

அந்த சமயத்தில் மூலவரின் திருமேனி அசைவது போலிருந்தது. குளிரால் கிருஷ்ணர் நடுங்குவதை அர்ச்சகரால் உணர முடிந்தது. என்ன செய்வதென தெரியாமல் நின்ற அர்ச்சகரிடம் திரிபுரர் தான் கொடுத்த ஆடையை அணிவிக்கும்படி வேண்டினார். அதன்படியே பட்டாடையைக் களைந்து நூல் ஆடையை அணிவிக்க கிருஷ்ணரின் நடுக்கம் நின்றது. அர்ச்சகர் திரிபுரரிடம் மன்னிப்பு கோரினார். காணிக்கை எது என்பது முக்கியமல்ல பக்தனின் அன்பையே கடவுள் ஏற்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s