ஜடாயுபுரீஸ்வரர்

download (1)

மன்னார்குடி அருகிலுள்ள கெழுவத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம் உள்ளது. சீதையை ராவணன் கடத்திச் சென்றபோது பறவைகளின் அரசனான ஜடாயு அவனை மறித்தார். ராவணனோ அவரது இறக்கையை வெட்டி வீழ்த்தினான். காயத்துடன் கிடந்த அவர் ராமனிடம் ராவணன் சீதையைக் கடத்தி செல்லும் விஷயத்தைச் சொல்லி உயிர் விட்டார் அவருக்கு ராமன் ஈமக்கிரியை செய்து வைத்தார். ஜடாயு இந்தப்பகுதியில் தங்கியிருந்தபோது பூஜித்த சிவலிங்கத்திற்கு ஜடாயுபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.1

இந்தக் கோயில் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கூறுவதாவது. 11 நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோயில் இது : சோழ மண்டலத்து அருமொஃஸி தேவ வள நாட்டு புறங்கறம்பை நாட்டுக் கெழுவத்தூர் என ராஜராஜசோழனின் கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் உள்ளது. அம்பாளின் பெயர் சவுந்திர நாயகி. கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாம். முழுமையாக சிதிலமடைந்து விட்டது. இருப்பினும் மூலவர் சிலைகள் விக்னேஸ்வரர் சண்முகர்  சண்டிகேஸ்வரர் அம்மன் சன்னதி கோபுரங்கள் நவக்கிரக மண்டபம் சகஸ்ரலிங்கம் ஆகியவை அப்படியே இருந்தன. இதையடுத்து இவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்ய திருப்பணி நடந்து வருகிறது.morepic_5749628

வேலைப்பாடு மிக்க கருங்கல் நந்தி மண்டபம் இங்குள்ளது. இங்குள்ள நர்த்தன வினாயகர் மான் மழு ஏந்திய அதிகார நந்தி  அவரது மனைவி சயஸ் சிறகுகளுடன் மனித வடிவிலுள்ள ஜடாயு சிற்பங்கள் சிறப்பானவை. கருவறையில் தெற்கில் தட்சிணா மூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்துள்ள பாறையின் கீழ் பாம்பு புலி சிங்கம் பறவைகள் படுத்த நிலையில் காளை இருப்பது வித்தியாசமானது.2

செல்லும் வழி    மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கெழுவத்தூர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s