நியூ[ஸ்]மார்ட்

tarun-sagar

ஹரியானா மானிலத்தில் 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய புத்தகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது ஹரியானா மானிலம் ஃபரீதாபாத்தில் சமண மதத்தைச் சேர்ந்த துறவி முனி ஸ்ரீ தருண்சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய இப்புத்தகம் 2000 கிலோ எடையில் 33 அடி உயரம் 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 96 மணி நேரத்தில் இப்புத்தகத்தை உருவாக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.chinese_provinces-map

சீனாவின் சோங்க் விங் நகரில் வசிக்கிறார் 48 வயது சென் ஸ்ங்கின் ஒரு விபத்தின் மூலம் இரண்டு கைகளையும் இழந்த இவர் தன்னுடைய விவசாய வேலைகள் அத்தனையும் இரண்டு கால் பாதங்கள் மூலம் செய்து வருகிறார் சோளக் கதிர் அறுக்கிறார் சோள மணிகளை கால்களால் தனித்தனியே உதிர்க்கிறார் மூட்டை கட்டுகிறார் அதே போல பாதங்களால் பாத்திரங்கள் தேய்க்கிறார். காய்கறி வெட்டுகிறார் அடுப்பு பற்ற வைத்து சமைக்கிறார் சமைத்த உணவை தன்னுடைய 91 வயது அம்மாவுக்கு ஸ்பூனை வாயில் பிடித்து ஊட்டியும் விடுகிறார் எவ்வளவு தன்னம்பிக்கை நிறைந்த மனிதர் இவர்.05_09_2015-rehman_hrithik_akshay

ஐ நா சபையின் லட்சிய திட்டங்களை விளம்பரப்படுத்தும் பிரசாரத் தூதர்களாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் வறுமை ஒழிப்பு உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு எரிசக்தி பாதுகாப்பு பாலின பாகுபாடு களைதல் அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளிட்ட 17 அம்ச லட்சிய இலக்குகளை ஐ நா சபை நிர்ணயம் செய்துள்ளது. இவை குறித்து மக்களிடம் எடுத்துரைக்க சர்வதேச அளவில் பிரபலமானவர்களை பிரசாரத் தூதுவர்களாக ஐ நா சபை நியமித்து வருகிறது அதில்தான் இவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் இவர்கள் தவிர அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா கைக்ரோசாஃப்ட் நிறுவன பில் கேட்ஸ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாங்கிங் உட்பட பலர் விளம்பரத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.2BF751BC00000578-3222273-Naguib_Sawiri

எகிப்து நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் தீவு ஒன்றை விலைக்கு கேட்டு வருகிறார் எதற்கு தெரியுமா? அகதியாக புகலிடம் தேடி துருக்கி நாட்டு கடலில் மூழ்கி கோஸ் தீவில் கரை ஒதுங்கிய  மூன்று வயது சிறுவன் அயலானின் ஃபோட்டோவை கண்டு உலகமே கண்ணீர் வடித்தது   இக்கொடூரத்தை கண்டித்தும் அகதிகளை காக்க வேண்டியும் சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில் எகிப்தைச் சேர்ந்த தொலை தொடர்பு  நிறுவன அதிபர் நகுய்ப் சாகுரிஸ் கிரீஸ் அல்லது இத்தாலியில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அத்தீவுக்கு அயலான் பெயரைச் சூட்ட உள்ளார் மேலும் அகதிகளாக வருவோரை அத்தீவில் குடியமர்த்தவும் திட்டமிட்டுள்ளார்drinkable-book-0001.jpg.662x0_q70_crop-scale

கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் தெரசா டான் கோவிச் தண்ணீரை வடிகட்டி சுத்தமாகத் தரும் ஓர் அபூர்வ புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் இதன் மூலம் உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடி நீர் கிடைக்குமாம் மிகச் சிறிய வெள்ளி செம்புத் துகள்களால் இப்புத்தகத்தின் பக்கங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன புத்தகத்தை திறந்து ஒரு தாளை எடுத்து அதன் மீது எந்த நீரை ஊற்றினாலும்  வடி கட்டப்பட்டு மிக சுத்தமான குடி நீர் கிடைக்கிறது இதில் 99 சதவீத தீமை செய்யும் பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றன புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் 100 லிட்டர் தண்ணீரை சுத்தம் செய்யும் ஆற்றல் படைத்தது ஒரு புத்தகம் ஒரு மனிதரின் தண்ணீர் தேவையை நாலு ஆண்டுகளுக்குச் சுத்தப்படுத்திக் கொடுத்துவிடும் விரைவில் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் தயாரிக்கப்படும் என்கிறார்கள்download

உலகிலேயே மிக அழகான சிலந்தியை ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் கடந்த மாதம் கண்டுபிடித்திருக்கிறார்கள் இதன் முகம் நீல நிறமாகவும் கால்களில் கறுப்பு வெள்ளைக் கோடுகளும் காணப்படுகின்றன பீகாக் ஸ்பைடர் என்று அழைக்கப்படும் இதன் அளவு மூன்று முதல் ஐந்து மில்லி மீட்டர்தான் பெண் சிலந்திகளை இணை சேர அழைக்கும்போது ஆண் சிலந்திகள் கால்களைத் தட்டி நடனமாடுகின்றன இவற்றை ஆராய்ந்த டாக்டர் ஒட்டோவும் டாக்டர் ஹில்லும் பீகாக் ஸ்பைடர் 21 முதல் 39 வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள் இவர்கள் சிலந்தியின் நடனத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s