வானம் பார்க்கிறாள் வையகம் காக்கிறாள்

Masaniamman Temple

உலகில் நடந்து வரும் அநியாங்களை கட்டுப்படுத்த அம்பாள் உக்ரசக்தியாக உருவெடுப்பாள். இதற்காக சிவன் அவ்வப்போது திருவிளையாடல்கள்  நிகழ்த்துவார். சிவனுக்கு ஐந்து தலைகள் அதுபோல் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் பிரம்மாவிற்கு தானும் சிவனுக்கு ஒப்பானவர் என்ற அகந்தை ஏற்பட்டது. எனவே சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்து நான்முகன் ஆக்கிவிட்டார். இதையறிந்த பிரம்மாவின் மனைவி சரஸ்வதி சிவனை பூலோகத்தில் உள்ள மாயனங்களில் வாழவும் அங்கு எரியும் பிணங்களின் சாம்பலை உடம்பில் பூசிக்கொள்ளவும் சாபமிட்டாள். இதையறிந்து சிவனின் மனைவி பார்வதி பூமிக்கு வந்தாள்.

KONICA MINOLTA DIGITAL CAMERA
KONICA MINOLTA DIGITAL CAMERA

தன் கணவர் மீண்டும் கைலாயம் வருவதற்காக மயானத்திலேயே சயன நிலையில் தவமிருந்தாள். இதனால் மயானசயனி என பெயர் பெற்றார்.  இதுவே பிற்காலத்தில் மாசாணி என திரிந்து விட்டது.6028-4647-2871565134_1

அம்மாப்பட்டி மாசாணியம்மன் 21 அடி நீளம் கொண்டவள். அவள் முன்பு அமர் நாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை சிவலிங்கமும் மகாமேரு என்னும் ஊசி வடிவ பீடமும் உள்ளது. மகாமேருவில் சகல தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். அம்பாள் முன்பு முன்னடி கருப்பசுவாமி காவல் தெய்வமாக இருக்கிறார். பரிவார தெய்வங்களாக தீராத பிரச்னைகளைத் தீர்க்கும் ராக்காயி அம்மன் கல்வி மற்றும் குழந்தை வரம் தரும் பேச்சியம்மன் வஞ்சகத்திற்கு ஆளானவர்களுக்கு நீதி தரும் மகாமுனி  மகா இடிகாளி ஆகியோர் உள்ளன்ர். சிவன் மடியில் அம்மன் படுத்த நிலையில் சிலையைக் கொண்ட தியான மண்டபமும் உள்ளது.masani-amman-2

மணல் உண்டியல் ஒன்றை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். இதில் வீட்டிலோ வீட்டின் அருகிலோ கிடைக்கும் மணலை நிரப்பி கோயிலில் கொடுத்துவிட வேண்டும். இவ்வாறு சேரும் மணலைக் கொண்டு அம்பாளின் உருவம் செய்து அமாவாசையன்று பூஜை நடத்துவார்கள். மணல் உண்டியல் கொடுப்பவர்களின் பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை. மாசி மாத கடைசி சனிக்கிழமைகளில் மயான பூஜை நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும்  என்பது நம்பிக்கை.masani-amman-41

செல்லும் வழி   ஒட்டன்சத்திரம்  தாராபுரம் ரோட்டில் 17 கிமீ தூரத்தில் கள்ளீமந்தயம். இங்கிருந்து மூலனூர் செல்லும் ரோட்டில் 3 கிமீ.

Advertisements

2 thoughts on “வானம் பார்க்கிறாள் வையகம் காக்கிறாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s