அதிசய ஆனைமுகன்கள்

எமனை விரட்டும் வினாயகர்2

திருப்பைஞ் ஞீலி தலத்திலுள்ள எமன் கோயிலில் நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள வினாயகர் தெற்கு திசையை நோக்கியபடி நின்ற நிலையில் காட்சி தருகிறார். இவர் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி உதைக்கும்  நிலையில் காணப்படுகிறார். அதாவது தெற்கு திசையில் உள்ள எமன் இங்கு வந்தால் எதிர்ப்புத் தெரிவிக்க உதைக்கும் நிலையில் இந்த தோன்றம் என்கின்றனர். நோய் நொடியின்றி வாழ இவர் அருள் புரிகிறார்.

இங்க் பிள்ளையார்

????????????????????????????????????
????????????????????????????????????

திருவாரூரில் கமலாலயத் தீர்த்தக் குளத்தில் கீழ்க்கரையில் அமர்ந்துள்ள பிள்ளையார் இங்க் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் இந்த பிள்ளையார் முன்பு பிரார்த்தனை செய்தவாறு இங்க் கை வினாயகர் மீது உதறிவிட்டுச் சென்றால் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

தலையை திருக தனம்3

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழியில் ஓர் அதிசய வினாயகர் காணப்படுகிறார். தலையைத் திருக தனம் கொடுக்கும் வினாயகர் என்பது இவரது திருப்பெயர். இந்த வினாயகரின் தலையைத் தனியாக எடுத்தால் உள்ளே கையளவு சுரங்கம் இருக்கிறது. அச்சுரங்கத்தில் காசுகளைப் போட்டு மீண்டும் எடுத்துக்கொண்டால் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

தாலி கட்டிக்கொள்ளும் பிள்ளையார்1

வடக்கு மாசி வீதியில் உள்ள நேரு ஆலால சுந்தர வினாயகர் கோயிலில் கன்னிப்பெண்கள் வெள்ளிக்கிழமைதோறும் கூடுகிறார்கள். அவர்கள் வயதுக்குத் தக்கபடி 16,21,26,32 என்றபடி விரளி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி பிள்ளையாருக்கு அணிவித்து பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு வழிபட்டால் நவக்கிரக தோஷம் விலகி நல்ல கணவர் அமைவார் என்றும் நம்புகின்றனர்.

கமிஷன் கணபதி4

அழகர் கோயிலுக்கு செல்லும் வழியில் அப்பன் திருப்பதி கிராமத்திலுள்ள வினாயகர் தரகு வினாயகர் எனப்படுகிறார். இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்கள் தங்கள் விளை நிலங்களில் விளைச்சல் சிறாந்திருந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு தானியத்தை தரகு கமிஷனாக தருவதாக வேண்டிச்செல்வர். சிறந்த விளைச்சலுக்குப்பின் தாங்கள் வேண்டியபடி இங்கு வந்து காணிக்கை செலுத்துவர்.

தும்பிக்கை இல்லாத பிள்ளையார்.8

தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகேயுள்ள திலதைப் பகுதியில் காணலாம். இங்கு இவர் வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்து இடது கையை இடதுகால் மீது வைத்து வலது கையை சற்று சாய்த்து அபயக்கரத்துடன் விளங்குகிறார்.

கௌபீன கணபதி7

திருகம்பகம் என்னுமிடத்தில் கணபதி கௌபீன தாரியாகக் காட்சி தருகிறார். இவரைக் காண பெண்களுக்கு அனுமதியில்லை.

சங்கு பாணி வினாயகர்6

பெரிய காஞ்சிபுரம் உலகளந்தார் தெருவில் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது சங்கு பாணி வினாயகர். பிள்ளையார் இங்கு புதுமையாக சங்கு வடிவில் காட்சியளிக்கிறார். திருமாலுக்கு வினாயகர் சங்கு ஒன்றைத் தந்தாராம்  பின்னர் அந்தச் சங்கே வினாயகராக மாறியதாகவும் புராணம் கூறுகிறது.

டிரவுசர் வினாயகர்099

சைனாவில் ஓர் ஆலயத்தில் உள்ள வினாயகர் சைனாக்காரர்கள் உடுத்தும் டிரவுசர் அணிந்து காட்சி தருகிறார். அவர் குறுங்காற்சட்டை வினாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

குட்டுப்படும் பிள்ளையார்vinayagar22102013

நரிமணம் என்ற ஊரிலுள்ள பிள்ளையார் தினமும் குட்டுப்படுகிறார். இங்கு பிள்ளையாரை வணங்குபவர்கள் அவர் தலையில் குட்டிவிட்டுத்தான் வணங்குவர்.340x

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ஆனைமுகனின் ஆசிகள் கிடைக்கவேண்டுமென மேன்டிக்கொண்டு எங்களின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Advertisements

2 thoughts on “அதிசய ஆனைமுகன்கள்

  1. Really felt very surprised and amazed reading this blog Amma. U always write what others’ donot even imagine of. That’s the reason ur blogs are very informative and interesting. Well done. Very proud of u:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s