வினாயகர் பெருமைகள்

shri_ganesh_by_lovelyboy88

நமது சம்பிரதாயத்தில் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் பூஜைகளிலும் முதலில் துதிக்கப்படுபவர் வினாயகர்.  விக்னங்களை உடைத்தெறியும் வல்லமை பெற்றவர் ஆதலால் விக்னேஸ்வரன் என்று போற்றுகிறோம். தன்னலமற்ற பக்தியின் மூலம் வினாயகரின் அனுக்கிரகத்தை எளிதாகப் பெறலாம் என்பது சான்றோர்கள் வாக்கு.07

வினாயகரை அனுதினமும் ஆராதிக்கலாம் எனினும் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி அவருக்கு உகந்த நாள். ஆவணி மாதம் வரும் வினாயகர் சதுர்த்தி மிக விசேஷம். அன்று வினாயகரை பூஜித்து அவருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து அவரது அருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

வினாயகரின் பெருமைகள்.hqdefault

பார்வதி தேவி பரமேஸ்வரனை பூஜித்து பெற்ற தவப்புதல்வன் வினாயகர். இவரின் உருவ அமைப்பு நமக்கு பல தத்துவங்களை உணர்த்துகிறது. வினாயகரின் வேழமுகம் விளையாட்டு பிள்ளைகளுக்கும் விருப்பமானதாகும். அகலமான காதுகள் மற்றவர் கூறும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்டு நல்லவைகளை ஏற்று அதன்படியே நடக்கவேண்டும் என்று நமக்கு உணர்த்தத்தானே.340x

வினாயகரின் நீண்ட துதிக்கை நாம் நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. அதுமட்டுமல்ல துதிக்கையானது சின்னஞ்சிறு கனியையும் எடுக்கும் பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கிவிடும். இடத்துக்கு ஏற்ப புரிந்து செயல்பட்டால் நம் வாழ்வு சிறக்கும் என்பதும் இதன் சூட்சமம்.Jai-Shree-Ganesha

வினாயகரின் உடைந்த தந்தம் மனிதன் தனது ஆசாபாசங்களை உடைந்தெறிந்தால் உன்னதமாக வாழ முடியும் என்பதைக் குறிக்கும். இவரின் கையில் உள்ள அங்குசம் மனிதன் ஆசைகளை அடக்கினால் அமைதியாக வாழலாம் என உணர்த்துகிறது.app698_2

உலகில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்தையும் சந்தித்து ஏற்று ஜீரணித்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் வழியில் அமைந்ததுதான் வினாயகரின் பெரிய வயிறு. மூஷிக வாகனம் அளவில் சிறிதாயினும் பக்தியினால் நம்பிக்கையுடன் வினாயகரை சுமப்பது  நம்பியவரை காக்க சேவையை ஏற்றுக்கொள்ள கண நாயகன் கணப்து தன் உடம்பை லேசாக்கி மூஷிகத்தின் மேல் உலா வருகிறார்.maxresdefault

வினாயகரோடு ஒப்பிடும்போது மூஞ்சுறு மிகச் சிறியதுதான். அது தாங்கும் வினாயகரின் ஆற்றல் வரம்பற்றது. அதாவது அணு மிக நுண்ணியது அதன் ஆற்றல் அளப்பரியது என்பதை உணர்த்தும் மெய் ஞான அறிவியல் இது. எல்லாரும் அணுகும் வண்ணம் எளிமையாய் இரு இனிமையாய் இரு பொறுமையாய் இரு அப்படியிருந்தால் அனைவராலும் விரும்பப்படுவாய் என உணர்த்துகிறார்  வினாயகர்.

Advertisements

2 thoughts on “வினாயகர் பெருமைகள்

  1. விநாயக சதுர்த்திக்குத் தகுந்த பதிவு. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
    மூஞ்சூறு, விநாயகர் விளக்கம் நன்றாக இருக்கிறது.

  2. என் பதிவுப்பக்கங்களையும் பார்ப்பது குறித்து மகிழ்ச்சி ரஞ்சனி உங்கள் அனைவருக்கும் ஆனைமுகனின் ஆசிகள் கிடைக்க நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s