இசையால் வசமாகா இதயம் எது?

tiruchendur-cover_700

திருச்செந்தூரில் வசித்த முத்தம்மை சிறுவயதிலேயே முருகன் மீது பக்தி கொண்டவள். அங்கிருந்த கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முருகனை பாடி பூஜிப்பதை கவனிப்பாள். தானும் அவர்களோடு பாட விரும்பினாள். ஒரு முறை பக்தர்களிடம் சென்று “ பாடும் பணியே பணியாய் அருள்வாய் ‘ என்ற கந்தரனுபூதி பாடலைப் பாட நான் விரும்புகிறேன் அனுமதி கொடுங்கள் “ என்றாள் பக்தர்களும் சம்மதித்தனர்.

அவளது குரல் இனிமையால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் தொடர்ந்து பாட அவளுக்கு அனுமதி அளித்தனர். காலம் சென்றது. முத்தம்மைக்கு வயதாகிவிட்டது. ஒரு முறை “ முருகா உன்னை எவ்வளவோ காலமாக பாடியிருக்கிறேன் இதை எந்த பலன் கருதியும் நான் பாடவில்லை. ஆனாலும் இந்த கிழவியின் மனதில் ஒரு ஆசை என் உயிர் பிரிவதற்குள் உன்னை நேரில் தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் அதை அருள்வாயா/’ என வேண்டினாள்.download

ஒரு நாள் முத்தம்மை பாடிக்கொண்டிருந்த நேரத்தில் யாரோ தன் அருகில் நிற்பது போல இருந்தது. திரும்பிப் பார்த்தால் இளைஞன் ஒருவன் நின்றான். அவள் தன்னைப் பார்த்ததும் ஒரு தூண் அருகில் சென்று மறைந்து கொண்டான். முத்தம்மை அவனிடம் “ மகனே ஏன் மறைந்து நிற்கிறாய்? அருகில் வந்து கேட்கலாமே “ என்றாள் அவனோ அங்கிருந்து ஓடிவிட்டான். என்ன காரணமோ தெரியவில்லை அவனைப் பார்த்ததில் இருந்து மூதாட்டியின் மனம் ஆனந்தத்தில் மிதந்தது. மறு நாள் பொழுது புலரும் நேரத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. முத்தம்மை ஜன்னல் வழியாக “ யாரப்பா ‘ என்று கேட்டாள்valli_muruga

மண்டபத்தில் பார்த்த அந்த இளைஞனும் அவன் மனைவியும் வாசலில் சிரித்தபடி நின்றனர். “ மகனே வா  இவன் தான் உன் மனைவியா? உலகத்து பெண்களின் அழகெல்லாம் இவள் முகத்தில் கொட்டிக் கிடக்கிறதே உள்ளே வாருங்கள் நீங்கள் யார்/’ என்றாள். “ அம்மா இவ்வளவு காலமாக என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே இன்னுமா என்னை அடையாளம் தெரியவில்லை  நானும் இதே ஊர்தான் உடனே எங்களுடன் கிளம்புங்கள் “ என்று அழைத்தான் இளைஞன். மூதாட்டிக்கு ஏன் என்று கேட்கத் தோன்றவில்லை. இளைஞனும் அவன் மனைவியும் முன்னே நடக்க மூதாட்டி பின் தொடர்ந்தாள். மூவரும் கல்யாண மண்டபத்தை அடைந்தனர். அங்கு இளைஞன் முருகனாகவும் அவன் மனைவி வள்ளீயாகவும் மாறி காட்சியளித்தனர். “ அம்மா பக்தியுடன் பாடுவோர் இருக்கும் இடத்தில் எல்லாம் நான் இருப்பேன். நீங்கள் என்று பாட ஆரம்பித்தீர்களோ அன்று முதல் உங்கள் பாடலைக் கேட்டு வருகிறேன். இன்று உங்கள் பார்வையில் சிக்கிக்கொண்டேன். “ என்று சொல்லி சிரித்தார் முருகன். வள்ளி அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டாள். அந்த அன்பான அணைப்புடன் அவளது உயிர் பிரிய முருகன் அவளை கந்தலோகத்துக்கு அழைத்துச் சென்றான். இப்போது முத்தம்மையின் பாடல் ஒலி அங்கு கேட்டுக்கொண்டிருக்கிறது.

Advertisements

2 thoughts on “இசையால் வசமாகா இதயம் எது?

  1. பக்தர்களுக்கு நேரில் காட்சி தரும் தெய்வம் என்பது எத்தனை உண்மை! முத்தம்மையின் பக்தி நிரம்பிய பாடலுக்கு முருகன் இறங்கியது மெய்சிலிர்க்கும் அனுபவம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s