சித்ரகுப்தர்

TN_141457000000

காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் மூலவராக தனி கோயில் கொண்டிருக்கிறார். ராஜாதி ராஜன் என்ற சிறப்பு பெற்ற இவரை சித்ராபௌர்ணமியன்று தரிசித்தால் வளமான வாழ்வு அமையும்.  எமலோகத்தில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய பிரம்மா சிவனைக்குறித்து தவம் செய்தார்.  அப்போது  கையில் எழுத்தாணி ஓலைச்சுவடி இடையில் உடைவாள் ஆகியவற்றுடன் தெய்வீக களையுடன் சித்ராபௌர்ணமி நாளில் ஒரு இளைஞர் அவதரித்தார். அவருக்கு சித்ரகுப்தர் என பெயரிட்டனர். பின் பிரம்மாவின் ஆணைப்படி காளிதேவியை வழிபட்ட சித்ரகுப்தர் கணக்கிலும் எழுத்திலும் தேர்ச்சி பெற்றார். அவந்திகாபுரி மகாகாலேஸ்வரரின் அருளுடன் எமலோக கணக்கு வழக்குகளை பதியும் கணக்கராக பதவி பெற்றார். பார்வதிதேவி வரைந்த் சித்திரத்திற்கு சிவன் உயிரூட்டியதாகவும் அவ்வாறு பிறந்த குழந்தை சித்ர குப்தன் என்று பெயர் பெற்றதாகவும் வரலாறு உண்டு.e30f6582-26a3-4a31-8588-71aedcc3a62d_S_secvpf

சவுராஷ்டிரத்தை ஆண்ட சவுதாஸ் கொடுங்கோலனாக இருந்தான். ஒரு நாள் வேட்டைக்குச் சென்றான். வழியில் மந்திர ஓசை கேட்டது. ஓரிடத்தில் முனிவர்கள் யாகம் நடத்திக்கொண்டிருந்தனர். “ என் அனுமதி இல்லாமல் யாகமா நடத்துகிறீர்கள்/’ என்று சொல்லி அவர்களைக் கொல்ல முயன்றான். “ அப்பனே நீ யார்  எதற்காக இடையூறு செய்கிறாய்/ என்று முனிவர்கள் வினவ நான் ராஜாதி ராஜன் சவுதாஸ் என்றான். முனிவர்கள் ராஜாதி ராஜன் சித்ரகுப்தர் ஒருவரே எங்கள் குலதெய்வமான் அவரையே இப்போது யாகம் செய்து வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.  என்ற அவர்கள் சித்ரகுப்தரின் பெருமைகளை அவனிடம் கூறினர். அது கேட்ட மன்னன் மனம் மாறி நல்லாட்சி நடத்த ஆரம்பித்தான். சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தருக்கு பூஜை செய்யவும் ஆணையிட்டான். சவுராஷ்டிர தேசத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு சித்ரகுப்தர் வ்ழிபாடு பரவியது.

Advertisements

One thought on “சித்ரகுப்தர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s