குங்கிலிய கலயர்

15.101181640_std

சோழ மண்டலத்தில் திருக்கடவூரில் பிறந்தவர் குங்கிலிய கலயர். அவர் அத்திருத்தலத்திலேயே உள்ள திருவீரட்டான சிவபெருமானுக்கு தினமும் குங்கிலத்தூபம் இட்டு வந்தார். சிவனடியார்களை அன்புடன் பேணிய அவர்  அதன் பொருட்டு தம் அனைத்து சொத்துக்களையும் இழந்தார். வறுமையில் வாடினாலும் தாம் செய்யும் திருப்பணியைத் தவறவில்லை.

ஒரு நாள் அவர் மனைவி பட்டினியினால் வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி தம்முடைய தாலியை அவர் கையிலே கொடுத்து இதை விற்று நெல் வாங்கி வாரும் என்றார். நெல் வாங்கி வரப் போனார் குங்கிலியக்கலய நாயனார். வழியிலே ஒரு வணிகன் குங்கிலியப் பொதி கொண்டு வரக் கண்டு குங்கிலத்தைப் பெற்றுக்கொண்டு தாலியை விலையாகக் கொடுத்துவிட்டு ஆலயத்துக்கு சென்று விட்டார். அங்கு குங்கிலியத்தை புகைய விட்டு சுவாமியை துதித்துக்கொண்டு இருந்தார்.b944

வீட்டிலே மனைவி மக்கள் பசியினாலே வாட அன்று இரவு ஈசன் அங்கு தோன்றி வீடு முழுவதிலும் பொற்குவியலும் நெற் குவியலும் பிற வளங்களும் நிறையும்படி அருள் செய்தார். மனைவிக்கும் கனவில் தோன்றி அருள் செய்தார். அதோடு கோயிலில் தங்கியிருந்த குங்கிலியக்கலய நாயனாருக்கும் தோன்றி “ உன் வீட்டுக்குப் போய் அன்னமும் உண்டு துன்பத்தை ஒழி “ என்று திருவாய் மலர்ந்தருளினார்.nakungil_i

அதன்படி வீட்டுக்கு வந்த நாயனார் “ இந்தச் சம்பத்துக்கள் எல்லாம் எப்படி வந்தன/” என்று மனைவியிடம் கேட்க நடந்ததைக் கூறினார் மனைவி. இறைவனையன்றி ஒருவரும் நமக்கு துணையாகார் என முழு மனதுடன் ஒழுகுபவரை இறைவன் ஒரு போதும் கைவிட மாட்டார் என்பதற்கு குங்கிலிய கலையர் ஒரு சிறந்த உதாரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s