செருப்புக்கு யானை

போஜராஜன் அவையிலிருந்த ராஜகவி ஒருவர் தெருவில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முதியவர் செருப்பு அணியாத காலுடன் நடப்பதைப் பார்த்தார். மனம் பொறுக்காத கவி தன் செருப்பைக் கொடுத்தார்.ST_20150305165100664978

முதியவர் மறுக்கவே “ ஐயா என்னால் வெயிலைத் தாங்கிக்கொள்ள முடியும் உங்களால் தாங்கமுடியுமா? “ என்ற கவி அவரிடம் செருப்பை கொடுத்துவிட்டு சூட்டில் நடந்தார். அப்போது பட்டத்து யானையுடன் அரண்மனை பாகன் அங்கு வந்தான். செருப்பின்றி நடந்த அவரை யானையில் ஏற்றிக்கொண்டான். ராஜகவி யானையில் வந்த வழியில் போஜராஜன் தன் ரதத்தில் வந்து கொண்டிருந்தான். ராஜகவியைக் கண்டதும் “ கவிஞரே எப்படி உனக்கு யானை சவாரி கிடைத்தது/” என கேட்டான். “ தானத்தின் மகிமை தான் மன்னா’ என்றார் ராஜகவி.

“ அப்படி என்ன தானம் செய்தீர்கள்’? என்றான் போஜன். “ என் பழைய செருப்பை ஒரு முதியவருக்கு தானம் கொடுத்தேன். அதன் பலனாக பட்டத்து யானையில் ஏறி சவாரி செய்யும் பாக்கியம் கிடைத்தது.” என்றார் ராஜகவி. மன்னனும் தானத்தின் பெருமையை உணர்ந்தான்.

Advertisements

One thought on “செருப்புக்கு யானை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s