ஆஹா தகவல்

download (2)

உலகின் முதல் பெண் விஞ்ஞானி ஜூயஸ் ஆவார். தங்கத்தைப் பெண்கள் அணியும் அணிகலனாக மாற்றியவரும் தங்கத்தை காரட் என்ற புதிய அளவையில் அளக்கலாம் என்று அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். 24 கேரட் தங்கத்தில் தாமிரத்தை சரியான விகிதத்தில் கல்ந்தால் மட்டுமே அதை அணிகலனாக வளைக்க முடியும் என்று கண்டுபிடித்து 22  கேரட் தங்கத்தை உருவாக்கியவர்   இயேசு கிறிஸ்து வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர். வேதியியலில் 70க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்து தனது கண்டுபிடிப்புகளை மரியா ப்ராக்டிகா என்ற நூலில் எழுதியுள்ளார்.araikkasu

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அம்மன் காசு எனப்படும் சிறிய காசு புழக்கத்தில் இருந்தது. காசின் ஒரு பக்கத்தில் தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வமான பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் மறுபக்கத்தில் விஜய என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கும். தசரா பண்டிகையின் போது ஏழை அந்தணர்களுக்குத் தானம் அளிக்கும் பொருட்டு இந்தக் காசு 1938ல் அச்சடிக்கப்பட்டது. காலணாவுக்கு ஐந்து காசுகள் ஒரு ரூபாய்க்கு 320 காசுகள் என்ற மதிப்பில் புழக்கத்தில் இருந்தன.17-white-house-300

அமெரிக்க அதிபரின் அலுவலகம் மற்றும் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். நீல நிற அறை அதிபரின் அலுவலுக்கானது. சிவப்பு அறையில் மன்னர் காலத்து பொருட்கள் பாதுகாக்கப்படுகிறது. பச்சை அறையில் ஜான் ஆதாம் மற்றும் தாமஸ் ஜெபர்சன் காலத்து பொருட்கள் உள்ளன. இளம்சிவப்பு நிற அறையில் அதிபரும் அவரது குடும்பத்தினரும் வசிக்கிறார்கள்.download (1)

திருவாலங்காடு அருகில் உள்ள வேம்பு மாரியம்மன் கோயிலில் உள்ள வேப்பமரம் அம்மனுக்கு குடையாக நிற்கும் பகுதி வரை வெண்மையாகக் காட்சி அளிக்கிறது. துளிர்க்கும்போது வெள்ளையாகத் துளிர்த்து உதிரும்பது வெள்ளை இலையாகவே உதிர்வது விசேஷமாகும். உதிர்ந்த இலைகளை வீட்டில் வைத்தால் நோய்கள் அண்டாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.download

மனித மூளை 80 முதல்  85 சதவீதம் வரை தண்ணீரைக் கொண்டதாகும். பெண்களைவிட ஆண்களுக்கு மூளை பெரியது. மூளையின் மடிப்புகளே அறிவுக்கூர்மையை தீர்மானிக்கின்றன. நமது நரம்பு மண்டலம் ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணர முடியாது. மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை.TA033573

பதினெட்டு நாட்கள் நடந்த மஹாபாரத யுத்தத்தின் முதல் நாளன்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வினால் அர்ச்சுனனுக்கு போதிக்கப்பட்டது பகவத் கீதை. யுத்தம் முடிந்த பின்னர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் முன்னிலையில் பீஷ்மாச்சாரியார் அவர்களால் தருமருக்கும் மற்றவர்களுக்கும் உபதேசிக்கப்பட்டு ஸ்ரீ கிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட்டது ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் ஆகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s