கத்ரி  பர்த்தி யாத்திரை

DSC06792

செப்டம்பர் மாதம் முதல் தேதி நான் கிருஷ்ணா ராதாவுடன்  இரவு எட்டு மணிக்கு கிளம்பும் திருப்பதி  எக்ஸ்பிரஸில் கத்ரி  எனும் ஊரில் உள்ள நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு கிளம்பினேன். காலை 7 மணிக்கு கத்ரியை அடைந்து கோவிலின் அருகேயே ஒரு அறை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். குளித்து தயாராகி காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கோயிலை அடைந்தோம்.

DSC06777

கத்ரி என்பது அனந்தப்பூர் ஜில்லாவில் உள்ள சின்ன நகரம். இங்குள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஸ்வாமி கத்ரி மர வேர்களில் சுயம்புவாக உருவானதாக புராணம் சொல்கிறது. இந்த மரத்தின் பெயரிலேயே இந்த ஊர் அழைக்கப்படுகிறது. இந்த ஜில்லாவில் பார்க்க நிறைய இருக்கிறது  ஆனாலும்  நேரமின்மையால் நாங்கள் இந்தக் கோயிலை மட்டும் தரிசித்துக்கொண்டு புட்டபர்த்திக்கு கிளம்பினோம்.

DSC06796

கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.  கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு திசைகளிலும் கோபுரங்கள் ராயலசீமா கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளன. உள்ளே மிக அழகான நரசிம்ம ஸ்வாமி. இதற்கு எத்தனை அபிஷேகம் செய்தாலும் அர்ச்ச விக்ரகத்திற்கு வியர்க்கிறது. அர்ச்சகர்கள் துடைத்த வண்ணம் இருக்கின்றனர். அருகே லக்ஷ்மி தாயாருக்கு தனி சன்னதி.  இங்கு வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக கூட்டம் வரும் என அர்ச்சகர் சொன்னார்.  இந்தக் கோயிலில் உள்ள தேர் மிகப் பெரியது பிரசித்தியானது. இந்தியாவிலேயே உள்ள தேர்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது இந்த ரதோற்சவம் இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது  இக்கோயிலின் அருகேயே சிறிய சிவாலயமும் அனுமார் கோவிலும் ராகவேந்திர சன்னதியும் உள்ளன. எல்லாவற்றையும் தரிசித்துக்கொண்டு வாடகைக்கார் வைத்துக்கொண்டு காலை 11 மணி அளவில் புட்டபர்த்தியை நோக்கி பயணமானோம்.

OLYMPUS DIGITAL CAMERA

கத்ரியிலிருந்து 50 கிமீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பிரசாந்தி நிலையம். இங்கு தான் என் பெரிய பெண் கல்லூரில் பி காம் படித்தாள். எத்தனையோ முறை போயிருக்கிறோம். ஆனால் பாபா மறைந்த பின் அவர் சமாதி தரிசனத்திற்காக நாங்கள் இந்த தடவை போனோம் பர்த்தியை அடைந்தபோது மணி பகல் 12.  பிரசாந்தி நிலையத்தை அடைந்து அங்கு சுவாமியின் பிரசாதம் உண்டு அறைக்கு திரும்பினோம்.

swami

சற்று ஒய்வு எடுத்துக்கொண்டபின் மாலை ஐந்து மணிக்கு மீண்டும் பிரசாந்தி நிலையம் அடைந்து குல்வந்த் ஹாலில் அமர்ந்தோம். அங்கு கலை நிகழ்ச்சிகள் பஜன் முடிந்ததும் வரிசையில் நின்று சமாதியை தரிசனம் பண்ணிக்கொண்டு அங்கேயே இரவு உணவையும் முடித்துக்கொண்டு  பிறகு இரவு 10.30 கிளம்பிய ராஜதானி எக்ஸ்பிரஸில் கிளம்பி மறு நாள் காலை 7.30க்கு ஹைதிராபாத்தை அடைந்தோம்.

DSC06774

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s