பளீர் டிப்ஸ்

download

தயிர் பழச்சாறுக்கு இணையான சத்துக்கள் உள்ளன.  மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளுக்கு தயிர் சிறந்த மருந்தாகும். தயிரிலுள்ள லேக்டிக் அமிலம் வயிற்றுப்போக்குக்குக் காரணமான கிருமிகளை அழித்து விடும். சூரிய ஒளியால் பாதிக்கப்படும் சருமப் பகுதிகளை தயிர் தனது சத்து மிகுந்த கலவைகளால் பாதுகாக்கிறது.P1100511

நீங்கள் போடும் இழைக்கோலம் மறு நாள் வரை அழியாமலிருக்க வேண்டுமா? அரை பங்கு பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அத்துடன் கால் பங்கு மைதா மாவு கலந்து கோலம் போட்டால் கோலம் அழியாமல் இருக்கும். சுத்தமான தரையில் போட்டால் கோலம் பளீரென்று பார்க்க அழகாக இருக்கும்.REINNA_Brand_pure_vegetable_cooking_oil_Jerry

எண்ணெய் கேன் வாங்கும்போது காலியானதும் பிசுபிசுவென்று இருக்கும். அந்தப் பிசு பிசுப்புப் போக சுடு நீரில் உப்பு போட்டு அதை கேனில் ஊற்றி குலுக்கி அந்த உப்புத் தண்ணீரை வெளிப்புறமும் ஊற்றவும். ஐந்து நிமிடம் கழித்து சோப்பு போட்டுத் தேய்த்துக் கழுவினால் கேன் பளிச்சென்று இருக்கும். பிசுபிசுப்பு இருக்காது. கேனை வேறு உபயோகத்துக்கும் பயன்படுத்தலாம்.download (1)

வாழைப் பழத்தில் வைட்டமின் ஏ பி சி பாஸ்பரஸ் கந்தகம் இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. சிறந்த மலமிளக்கியும் கூட   வாழைப்பழத்தை தினமும் ஒரு வேளை ஆகாரமாகச் சாப்பிட்டு வருபவர்களுக்கு  அறிவுத்திறன் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் இது நோய் தடுப்பானதாகவும் செயல்படுகிறது.LG Asafoetida (Katti Perungayam)-500x510-800x500

கட்டிப்பெருங்காயம் இறுகிப்போகாமல் நீண்ட நாள் இருக்க வேண்டுமா? பெருங்காயம் வைத்திருக்கும் டப்பாவில் ஒரு பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளிப்போட்டு வைக்கவும் இதனால் பெருங்காயத்தை எளிதில் கிள்ளி எடுக்கவரும். இறுகிப்போகாது.rava-upma

உப்புமா செய்யும்போது தாளிப்பு செய்துவிட்டு வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கியவுடன் ரவையையும் சேர்த்துக்கிளறவும். பிறகு கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தால் உப்புமா உதிரியாக இருக்கும்.SAM_3611பவளமல்லி இலைகள் பத்து எடுத்து சுத்தம் செய்து நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி தினமும் அருந்திவர மூட்டு வலி நீங்கும். சங்கு புஷ்பம் இலைகளை அரைத்து வலி வீக்கம் உள்ள இடங்களில் பற்றுப்போட நல்ல நிவாரணம் கிடைக்கும். எருக்கன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டுப் பகுதியில் வைத்துக்கட்டினால் வலி விரைவில் குறையும்.

நன்றி  மங்கையர் மலர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s