தும்பித் துள்ளல்

download (1)

ஓணம் பண்டிகையின் பத்து நாள் கொண்டாட்டத்தில் அன்றைய காலகட்டத்தில் நம்பூதிரிமார்களின் மனைவியர்கள் வெளியில் வருவது கிடையாது. சிறுமிகள் அனைவரும் மாலை நான்கு மணி அளவில் ஒன்றுகூடி ஒவ்வொரு நம்பூதிரிமார்களின் வீட்டுக்கம் சென்று ‘ கை கொட்டிக்களி ‘ ஆடுவார்கள். இந்த பத்து நாட்களும் அந்தப் பெரிய அறையில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. அறையின் ஓரிடத்தில் களிமண்ணால் சதுர வடிவில் செய்யப்பட்ட 3 சதுரங்கள் வைக்கப்பட்டு சந்தனம் குங்குமம் பூ சூட்டப்பட்டு இருக்கும். கடவுளாக நினைத்து இதனை வணங்குகிறார்கள்.klm15onam2

நடுவில் சிறிய பெண்ணொருத்தியை அமர வைத்து மற்ற பெண்கள் அவளைச் சுற்றி சுற்றி கைகளைக் கொட்டி நடனமாடுவார்கள். விதவிதமான பாடல்களும் கைகள் மற்றும் கால்களை மாற்றி மாற்றி வைத்து சுமார் இரண்டு மணி நேரம் ஆடுவார்கள். நடுவே ‘தும்பி’ மாதிரி அமர்ந்திருக்கும் பெண் துள்ளிக் குதித்தால் ஸ்வாமியே வந்த மாதிரி ஒரு ஐதீகம்.16-1379300146-onam1-600-jpg

அத்தனைப் பெண்களும் சாப்பிட பழங்கள் பொரித்த பப்படங்கள் சுடச்சுட சாயா போட்டு ஒரு பக்கத்தில் வைத்திருப்பார்கள். ஆட்டத்தின்  இடையிடையே எது வேண்டுமோ  தேவையானதை எடுத்து சாப்பிடலாம். ‘ தும்பித் துள்ளல் ‘ ஆட்டத்தில் கும்பியும் [ வயிறும் ]  நிறையும். தற்போது தும்பித் துள்ளல் ஆட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s