திருக்காட்கரை திருவோணம்

onam

கேரள மானிலம் எர்ணாகுளம் மாவட்டம் இடப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே ஆறு கிமீ தொலைவிலும் கொச்சியிலிருந்து பத்து கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது திருக்காட்கரை திவ்யதேசம். இத்தலம் பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று மஹாபலி சக்ரவர்த்தியை மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி பாதாள லோகத்திற்கு அனுப்பிய தலம் ஆகும். இக்கோயிலில் மகாவிஷ்ணு வாமன அம்சமாக எழுந்தருளி தெற்கு நோக்கி நின்றகோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.29-onam-festival

ஓணம் திருவிழா இங்குதான் முதல் முதலில் விமரிசையாக நடந்தது. அதன் பிறகே கேரள மானிலம் முழுவதும் பரவியதாக ஐதீகம். இன்றும் ஹஸ்தம் நட்சத்திரத்தன்று கொடியேற்று உற்சவம் தொடங்கி பத்து நாட்கள் கோலாகலமாக திருவிழா  நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள்.2014

ஓணம் பண்டிகையன்று இங்கு நடைபெறும் நேந்திரம் வாழைக்குலை வழிபாடு  மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழிபாட்டின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் நேந்திரம் வாழை தார்களுடன் நீண்ட வரிசையில் நின்று இடம்பிடித்துக்கொள்கிறார்கள். அதன்பின் தாங்கள் கொண்டு வந்த வாழைத்தார்களை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வழிபடுகிறார்கள்.

இந்த திருக்காட்கரை தலத்திற்கும் அங்கு விளையும் சுவை மிகுந்த நேந்திரம் பழத்திற்கும் தொடர்பு உண்டு. பக்தர் ஒருவர் தனது விளை நிலத்தில் வாழை மரங்களை பயிரிட்டாராம். அவை வளர்ந்ததும் பயன் தராமல் அழிந்து போயிற்றாம். இது தொடரவே கவலையுற்ற அவர் தங்கத்தால் வாழை குலை ஒன்று செய்து  திருக்காட்கரை அப்பனுக்குச் சமர்ப்பித்தாராம். பக்தரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் தன்னுடைய பார்வையை வாழை மரங்களின் மீது செலுத்தினார்.  வாழைமரங்களில் மரம் கொள்ளாத அளவுக்கு காய்கள் காய்த்தன. காரணம் எம்பெருமானின் நேத்திரங்களால் பார்க்கப்பட்டதால் அந்த மரங்களுக்கு நேந்திரம் பழம் என்று பெயர் ஏற்பட்டது. காணிக்கையான வாழைக் குலைகளை இக்கோயிலின் வாசலில் வரிசையாகக் கட்டி தொங்கவிடுகிறார்கள்.download

கபில முனிவர் இத்தலத்து பெருமானை வழிபட்டதால் இத்தீர்த்தம் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.  இந்தக் கபில தீர்த்தத்தில் உள்ள நீரைத்தான் மஹாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்று அடி நிலம் தருவதாகத் தாரை வார்த்துக் கொடுத்தார்.

எல்லோருக்கும் எங்களின் ஓணம்  நல்வாழ்த்துக்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s