நபகளேபரா

download

உலகப்புகழ்பெற்ற ஒரிசா பூரி ஜெகன்னாதர்  ஆலய மூர்த்திகளின் சிலைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்படுகின்றன என்பது இந்த ஆலயத்தில் மட்டுமே பின்பற்றப்படும் நடைமுறை புதிய சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்காகச் செய்யப்படும் சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பெயர் நபகளேப்ரம்.images

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்த்தப்படும் இந்த விழா இவ்வாண்டு நடைபெற்றது. இதைக் காண உலகெங்கிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பொதுவாக வருடத்துக்கு 12  மாதம்தான் என்றாலும் ஒரிய  நாட்கட்டியின்படி அபூர்வமாக ஏதேனும் ஓராண்டில் வழக்கத்துக்கு மாறாக ஒரு மாதம் கூடி வரும் என்ற கணக்கு உள்ளது.  இவ்வாறு வரும் மாதத்தில் இவ்வாலய சிலைகளைப்  புதுப்பிக்கவேண்டும் என்பது நியதி.  அதன்படி ஜெகன்னாதர் பலபத்திரர் சுபத்திரர் சுதர்சனர் ஆகியோரின் சிலா ரூபங்கள் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கின்றன.54778

சிலைகளை வடிவமைக்கத் தகுந்த மரங்களை தேர்ந்தெடுக்கும் பணி நபகளேபர ஆண்டின் முதல் மாதத்திலேயே தொடங்கிவிடுகிறது.  பூரியிலிருந்து சற்று தொலைவில் உள்ளது காகட்பூர் மங்கல தேவி கோயில் இத்தேவிக்கு உரிய சடங்குகளைச்  செய்து பிரார்த்தித்தால் அர்ச்சகரின் கனவில் தோன்றி இறை திருவுருவங்கள் செய்ய தேவையான மரங்கள் இருக்குமிடத்தை தேவி உணர்த்துவாள் என் கிறார்கள் இங்குள்ள ஆன்மிக அன்பர்கள்.

உரிய சடங்குகளுக்குப் பின் மரம் வெட்டி எடுக்கப்பட்டு வண்டியில் ஏற்றி அவற்றைப் பக்தர்களே ஊர்வலமாக இழுத்து வருவர். கோயில் வளாகத்தில் சிலை உருவாக்கப் பணி ரகசியமாக நடைபெறும். இக்காலத்தில் கோயில் நடை சாத்தப்படும். சிலை செய்வதற்குரிய மரத் துண்டுகள் சந்தனம் கஸ்தூரி உள்ளிட்ட வாசனைப் பொருட்களைக் கொண்டு மணம் ஏற்றப்படும். அதிக மாதத்தின் வளர்பிறை சதுர்த்தசி நாளன்று நள்ளிரவில் பீடத்திலிருந்து பழைய சிலைகளை அகற்றிவிட்டு புதிய விக்ரங்களை ஸ்தாபிக்கும் சடங்குகள்  நடைபெறும். பின்பு அழைய விக்ரங்கள் ஆலயவளாகத்தில் மணலின் அடி ஆழத்தில் புதைக்கும் சடங்குகள் நடைபெறும்.purijagannathtemple295

மறு நாள் புதிய சிலைகள் அவற்றுக்குரிய ரத்தின சிம்மாசனத்தில் பொருத்தப்படுகின்றன. புதிய அலங்காரத்தில் தோன்றும் கடவுளுக்குப் படையலும் பூசையும் சிறப்புற நிகழும். இதற்குள் விழா தொடங்கி 58 நாட்கள் ஆகிவிடுகிறது. மூன்றாம் நாள் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.

மனித உடல் அழியக்கூடியது. இருந்தாலும் மக்கள் புத்தாடை அணிந்து வாசனை திரவியங்கள் பூசி மெருகேற்றிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு உடலைப் புதுப்பித்து வாழ் நாளை நீட்டித்துக்கொள்ளும் ஆற்றல் இல்லை. அழியாத உயிர்ப்பொருளை அழியக்கூடிய உடலில் செலுத்தி உலகைப் பரிபாலிக்கும் வல்லமை இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பதை இவ்விழா நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s