காஷாய மகிமை

maxresdefault

பதினேழாம் நூற்றாண்டு ஸ்ரீ ராகவேந்திரரின் பெருமை  நாடெங்கிலும் பரவிய காலம். ஸ்வாமிகள் கும்பகோணத்தில் இருந்த சமயம். ஒரு நாள் வெளியூர்லிருந்து வந்த அந்தணர்கள் ராகவேந்திரர் கேட்டதைக் கொடுப்பார் என்கிறார்களே அவர் மற்றவர் மனதிலிருப்பதையும் அறிய வல்லவரா என்று பரீட்சித்துப் பார்க்க எண்ணினார்கள்.

அன்று மடத்தில் சாப்பாட்டில் சில பட்சணங்கள் பரிமாறப்பட வேண்டும் என விரும்பி அவற்றின் பெயரை தம் மனதில் நினைத்துக்கொண்டனர். அப்போது அவர்கள் காவிரிக்கரையி நின்றிருந்தனர். அச்சமயம் ஸ்ரீ ராகவேந்திரரின் சீடன் ஒருவன் ஸ்வாமிகளின் காவி வஸ்திரத்தைத் துவைப்பதற்குப் படித்துறையில் இறங்கியவாறே “ சீக்கிரம் குளித்து விட்டு வாருங்கள் நீங்கள் விரும்பிய பட்சணங்கள் மடத்தில் தயாராகிக்கொண்டிருக்கின்றன’” என்றான். வந்திருந்த அந்தணர்கள் திகைத்துப்போயினர்.

காஷாயத்தை துவைத்துக்கொண்டிருந்த சீடனிடம் “ நாங்கள் என்ன நினைத்தோம் என்று உனக்கு எப்படி தெரியும்?” என அந்தணர்கள் வினவினர். அப்போது காஷாயம் அவன் கையிலிருந்த சீடன் “ நான் என்ன சொன்னேன்? எனக்கு ஒன்றும் தெரியாதே “ என்றான்.hqdefault

ஆனால் காஷாயத்தை கையில் எடுத்ததும் முதலில் சொன்னதையே சொன்னான். அந்தணர்கள் ஸ்வாமிகளின் காஷாயம் கையில் இருக்கும்போது சீடனுக்கே எல்லாம் தெரிகிறது  அப்படியானால் ராகவேந்திரது மகிமையை என்னவென்று விவரிப்பது? என வியந்தவாறு மடத்தை அடைந்தனர்.

அங்கே உணவில் அவர்கள் விரும்பியவை இருந்தது மட்டுமல்ல  ஸ்ரீ ராகவேந்திரரே பந்தி விசாரணையில் என்ன கேட்டது கிடைத்ததல்லவா? திருப்திதானே என்றார். அந்தணர்கள் தம் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கோரினர். அவர்களை அனுக்கிரகித்த ஸ்ரீ ராகவேந்திரர் அவர்களின் வழித்தோன்றல்களே தனது பிருந்தாவனத்துக்குப் பூஜை செய்வார்கள்  அவர்கள் விரும்பிய பட்சணங்களையே நைவேத்தியம் செய்யவேண்டும் என்று அருளினார். இன்னும் மந்த்ராலயத்தில் பூஜைகளை இவர்கள் பரம்பரையினரே செய்து வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s