நியூ[ஸ்]மார்ட்

rare horse

இங்கிலாந்தைச் சேர்ந்த வெண்டி பால்மர் குதிரைகளை வளர்த்து வருகிறார். பிறந்து 7 வாரங்களே ஆன குதிரை குட்டியின் உடலில் வெள்ளை நிறத்தில் ஒரு குதிரையின் படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  ‘ டா வின்சி ‘ என்ற பெயர் கொண்ட இந்தக் குதிரையை ஏராளமானவர்கள் வந்து பார்க்கிறார்கள். ‘ டா வின்சி ‘ யின் தோழி குதிரை வின்னியின் பின்புறம் இதய வடிவம் இருக்கிறது. இரண்டு குதிரைகளையும் நினைத்து பெருமைப்படுகிறார் வெண்டி பால்மர்.download

வழக்கமான முறைகளில் கிடைக்கும் மின் உற்பத்தியைவிட காற்றாலைகள்   சூரிய சக்தி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் மின் உற்பத்திக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 12 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டு 7500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவ ரூபாய் 47 ஆயிரம் முதல் ரூபாய் 60 ஆயிரம் வரை செலவாகும். இதில் ரூபாய் 20 ஆயிரத்தை தமிழக அரசு மானியமாக அளிக்கிறது. இதற்கு தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பை  நிறுவ தமிழகத்தில் 3300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1200 பேர் அரசு மானியமும் பெற்று அவர்களது வீடுகளில் மின் உற்பத்தியும்  தொடங்கிவிட்டது.images

ஸ்மார்ட் கண்ணாடி ஒன்றை விஞ்ஞானிகள்  உருவாக்கி வருகிறார்கள். இந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நிற்கும்போது அவரது முகம் மற்றும் மூச்சு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அவருக்குப் பிற்காலத்தில் நீரிழிவு  மாரடைப்பு அல்லது இதர இதய நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருந்தால் அவற்றைக் குறித்து தெரிவிக்கும்.  வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவிக்கும் என்பது இதன் சிறாப்பம்சம் ஆகும். ‘ வைஸ் மிரர் ‘ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கண்ணாடியில் பல சென்சார்கள்  ஐந்து கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது கம்ப்யூட்டர் உதவியுடன் முகத்தில் இருக்கும் திசுக்களில் உள்ள கொழுப்பு மற்றும் ரத்த அணுக்கைன் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராயும்.26B53B5600000578-0-image-a-12_1426544201104

சாலையிலும் ஓடக்கூடிய ஆகாயத்திலும் பறக்கக்கூடிய கார்கள் அனேகமாக இன்னும் 12 ஆண்டுகளுக்குள் புழக்கத்துக்கு வந்து விடும். தெருவில் ஓட்டிச் செல்லும்போது தேவைப்பட்டால் அப்படியே இறக்கைகளை விரித்து பறக்க வைக்கலாம். விமானத்தைப்போல இதற்கு ரன்வே தேவையில்லையாம். பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்தக் கார் விற்பனைக்கு வந்தால் சுமார் இரண்டு கோடி ரூபாய் விலை இருக்குமாம்.van athen tree

ஒரே மரத்தில் நாற்பது வகை பழங்களை காய்க்கச் செய்து அமெரிக்கா வேளாண் விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் தாவரவியல் பேராசிரியராக சாம் வான் அதேன் தனது பண்ணைத் தோட்டத்தில் பலவித மரங்களை வளர்த்து வருகிறார். இவர் குறிப்பிட்ட ஒரு மரத்தில் பல்வேறு விதமான பழங்களைக் காய்க்கச் செய்ய கடந்த 7 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்தார்   இதற்காக அந்த மரத்தில் வெவ்வேறு விதமான மரங்களின் தண்டுகளை இணைத்து வளர்த்து வந்தார். அந்த மரத்தில் தற்போது செரீஸ்  பீச்சஸ்  பிளம்ஸ்  நெக்ரன் என 40 வகையான பழங்கள் காய்த்துத் தொங்குகின்றன.

Advertisements

One thought on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s